உலகம் செய்தி தங்கும் விடுதியில் தீ விபத்து ரஷ்யாவில் 8 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவின், மாஸ்கோ நகரில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள், மற்ற நாடுகளிலிருந்து குடியேறியவர்களுக்காக ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் ஒரு விடுதியில் நேற்று திடீரென தீ விபத்துஏற்பட்டது. இங்கிருந்த 200க்கும் மேற்பட்டோர் தப்பியோடினர். ஆனால், முதல் மாடியில் ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறக்க முடியாததால், எட்டு பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்; காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து, மாஸ்கோவின் பாதுகாப்பு குழுத் தலைவர் கிரில் ஷிடோவ் கூறுகையில், ”விடுதியில் பாதுகாப்பு விதிமீறல்கள் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்,”என்றார்.