அமெரிக்காவில் வனப்பகுதியில் 10 நாட்களாக தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீ

மெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எல்டொரோடா வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அப்பகுதி மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்து இருப்பதால் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீயால் கருகி உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத் தீயால்  சுமார் 42,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.