டுவிட்டர், பேஸ்புக் மற்றும் கூகல் நிறுவனங்களின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் !!

கூகுள், டுவிட்டர், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்கள் மீது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வழக்கு தொடுத்துள்ளார். அவர் இந்த நிறுவனங்களின் தணிக்கைக்கு பலியாகி விட்டதாக கூறி உள்ளார். இந்த வழக்கில் அந்த 3 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த வழக்கு, பேச்சுரிமைக்கு மிக அழகான முன்னேற்றமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரபரப்பாக இயங்கிய டிரம்ப், வன்முறையை விளைவிக்கக்கூடிய கருத்துகள் மற்றும் பொய்யான தகவல்களை அடிக்கடி பரப்பியதாகக் கூறிய குற்றச்சாட்டுகளால் அங்கு அவரது செயல்பாடுகள் முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.