- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

TORONTO VOICE OF HUMANITY நிறுவனம் சார்பில் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் TORONTO VOICE OF HUMANITY அமைப்பின் சார்பாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் அங்கு விதவைத் தாய்மார்களின் நலன்பேணும் பணிகளில் ஈடுபட்டு வரும் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நிதியை யாழ்ப்பாண பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திரு ப. தமிழ்மாறன் TORONTO VOICE OF HUMANITY அமைப்பின் தலைவர் திரு ஆர். என்.லோகேந்திரலிங்கம், அவரது பாரியார் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இங்கே காணப்படும் படத்தில் யாழ் பவுண்டேசன் அமைப்பு சார்பில் திருமதி சாலினி சார்ள்ஸ், கலைஞர் கொலின், கலாச்சார உத்தியோகத்தர் ஸ்ஜோன் அலிஸ்ரஸ் ஆகியோர் உட்பட சிரேஸ்ட பத்திரிகையாளர் திரு வீ. தேவராஜ் உட்பட பலர் காணப்படுகின்றனர்.