டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ் அரையிறுதியில் விளையாடினர்.

இந்த போட்டியில், 5-12 என்ற கணக்கில் பூனியா தோல்வி அடைந்து உள்ளார்.

இதற்கு முன் நடந்த காலிறுதி போட்டியில் பூனியா, ஈரானின் மோர்தசா கியாசி செகாவை வீழ்த்தினார். அரையிறுதியில் தோல்வி கண்டுள்ள பூனியா, நாளை நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.