டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை வெற்றி; பதக்கம் உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் மகளிர் குத்து சண்டை காலிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெற்றி பெற்று பதக்கம் உறுதி செய்துள்ளார்.

டோக்கியோ,
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8வது நாளான மகளிர் வெல்டர்வெயிட் குத்து சண்டை காலிறுதியில் 64-69 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் மற்றும் சீன தைபேவின் சின்-சென் நியென் விளையாடினர்.

இந்த போட்டியில் லவ்லினா 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். காலிறுதியில் வெற்றியடைந்து முன்னேறியுள்ள லவ்லினா இந்தியாவுக்கு பதக்கம் ஒன்றை உறுதி செய்துள்ளார்.