ஜூன் 30-ல் துவங்கிறது இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை

ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரை, ஜூன் 30-ம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு 11-ம் தேதி துவங்குகிறது.

ஜம்மு — காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில், ஆண்டுதோறும், ஜூன் இறுதியில் இருந்து, ஆகஸ்ட் வரை, பனிலிங்க வடிவில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இந்த பனிலிங்கத்தை தரிசிக்க, நாடு முழுதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். 2021-ம் ஆண்டுக்கான யாத்திரை, ஜூன், 28ல் துவங்கி, ஆகஸ்ட், 22 வரை நடக்கும் எனவும், முன்பதிவு, ஏப்., 1-ம் தேதி துவங்கும் என, கோவில் வாரியம் அறிவித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு யாத்திரை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் 2022 ம் ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை துவங்கும் தேதியை கோயில் வாரியம் அறிவித்தது.இதன்படி வரும் ஜூன் 30-ல் துவங்கி, ஆகஸ்ட் 11 வரை நடக்கிறது. இதற்கான முன்பதிவு வரும் ஏப்.11-ம் தேதி துவங்குகிறது. www.shriamarnathjishrine.comஎன்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.