மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்; எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 13 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன.

கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர்.