அருகருகே அமர்ந்து எல்லாம் ஸ்டாலின், பன்னீர், பழனிசாமி

மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் , மதுசூதனன் நேற்று (ஆக.5ம் தேதி) காலமானார். அவரது உடல் சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி , முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

காலை 8 ;15 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் மதுசூதனன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்தார். தொடர்ந்து பன்னீர்செல்வம், பழனிசாமி , ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்தனர். அவரும் பதிலுக்கு கும்பிட்டார். பின்னர் 3 பேரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். சில நிமிடங்கள் கழித்து ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் மற்றும் பலர் திமுக நிர்வாகிகள் வந்திருந்தனர்.