- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

யூடியூப், கூகுள் செயலிகளை முடக்க ஹேக்கிங் அட்டாக் நடந்ததா ?
பிரபல இணையதளமான கூகுள் நிறுவனத்தின் பல்வேறு செயலிகள் உலகம் முழுவதும் முடங்கின. தற்போது படிப்படியாக செயலிகள் சீராக செயல்பட துவங்கின.
கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில், பிளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல செயலிகள் உலகம் முழுவதும் திடீரென முடங்கின. அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் மாலை 5 மணி முதல் படிப்படியாக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சர்வர் கோளாறு காரணமாக கூகுள் நிறுவன செயலிகள் செயல்படவில்லை என தகவல் வெளியாயின
இதனையடுத்து #GoogleDown #YouTubeDOWN போன்ற ஹேஸ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. இந்த செயலிகள் முடக்கமானது மொபைல் போனில் மட்டுமே உள்ளதாகவும், கணினிகளில் கூகுள் நிறுவன வலைதளங்கள் எந்தவித பிரச்னையும் இன்றி செயல்பட்டு வருகின்றன. பிரச்னைக்கு தீர்வு காண்பதில் ஈடுபட்டுள்ளதாக கூகுள் விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து சுமார் அரை மணி நேரம் முடங்கியிருந்த யூடியூப், கூகுள் செயலிகள் தற்போது படிப்படியாக மீளத் துவங்கியுள்ளன.