பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை 14 மற்றும் 15ம் தேதி அரசு விடுமுறை வழங்கப்படும் நிலையில் சனிக்கிழமை சேர்த்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு கோரிக்கையை ஏற்று 16-ஆம் தேதி அதாவது சனிக்கிழமை விடுமுறை வழங்கியுள்ளது.
இந்நிலையில் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி சேர்த்து  சனிக்கிழமை விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.