
“Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன ?
கனடாவில் தமிழரின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில், கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினரும் மற்றும் Mr.தமிழ் கனடா அமைப்பினர் நடத்திய “Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன !
பொங்கல் நிகழ்வானது, தமிழ் உழவர்களினால் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, விரதமிருந்து கொண்டாடப்படும் நிகழ்வை, கனடாவில் இந்த அமைப்பினர் தமிழர்களாக தாம் பிறந்தும், தமிழரின் கலாச்சாரத்தை வேற்று இனத்தினருக்கு பிழையாக புரிய வைத்து, பணம் சம்பாதிப்பதற்காக “Beef & alcohol” கொடுத்து “மாமிச பொங்கல் இராப்போசன” நிகழ்வை நடத்தி, கனடியத் தமிழர்களையும் மற்றும் உலகத்தமிழர்களையும் அவமானப் படுத்துகின்றார்கள் !
இவ் நிகழ்வு மதம் சார்ந்தது அல்ல. தமிழை தாய் மொழியாக பேசும் தமிழர்களிற்கானது !
ஆதித்தமிழன் பின் பற்றி வந்த தமிழரின் கலாச்சார பண்பாட்டை, தமிழர்களான சைவர்களும், இஸ்லாமியர்களும் மற்றும் கிறிஸ்தவர்களும் கொண்டாடி வருகின்றார்கள் !
ஆனால், இப் புவியில் ஆதித்தமிழன் பேணி வந்த தமிழ் கலாச்சாரத்தை, மாமிச கலாச்சாரமாக சில அமைப்புக்கள் பணத்திற்காக மாற்றுவது, கனடாவின் பல் கலாச்சார சட்டத்திற்கும் எதிரானது. ஒரு இனத்தின் கலாச்சாரத்தை எவராயினும் வேணுமென்று தவறாக வழி நடத்தினால், அது பல் கலாச்சார நாடான கனடாவின் சட்டத்திற்கு எதிரானது !
கனடாவில் “தமிழ் இருக்கையை” உருவாக்கும் அமைப்பிற்கு தலைவராக இருக்கும் சிவன் இளங்கோ அவர்கள் தான், இந்த கனடிய தமிழ் காங்கிரஸ்(CTC) அமைப்பின் தலைவரும் கூட. “மாமிச பொங்கல்” நடத்தும் இவர்களை நம்பி, எப்படி “தமிழ் இருக்கையை” சரியாக நடத்துவார்களா என்ற அச்சம் எல்லோருக்கும் வருகின்றது !
கனடா நாட்டில் பிரதமரும் மற்றும் அரசியல் கட்சியினரும், தமிழர்களின் கலாச்சார உடையை(வேட்டி & சேலை) அணிந்து, பொங்கல் பானை வைத்து கொண்டாடும் காலத்தில், தமிழர்களாக பிறந்து வழி தவறி போகும் இந்த அமைப்புக்கள், தாங்களாகவே திருந்துவார்களா அல்லது விரைவில் சட்டரீதியாக திருத்தப் படுவார்களா ?
உலகத்தமிழர்களே இவ் விடையத்தை ஒரு நிமிடம் சிந்தியுங்கள். தமிழரின் கலாச்சார பண்பாட்டை, எதிர்கால சந்ததிக்கு எடுத்துச் செல்லும் கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது !
மக்களின் நண்பன்,
பராசுரன்(கனடா / ஈழம்)
மேலும் சிலர் பதிவுசெய்த கண்டன பதிவுகள் !!
மிக்க தவறு !! அவசியம் தடுக்கப்படவேண்டிய ஒன்று !!
கிறிஸ்துவ .. ஜிஹாதி கூட்டங்கள், தமிழர் என்ற பெயரில் பொங்கல் போன்ற நமது பண்டிகைகளை சீரழிகின்றன்றனவா ?