ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் கதை சொல்லும் புதிய டிவி சீரியல் துவக்கம் !!

ரங்கா புரடக்ஷன்ஸ் சார்பில் ஹெச். சுந்தர் தயாரிக்க, எஸ் . அருண் குமாரின் கதை அமைப்பில்,  ஆர் சபரி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக இருக்கும் தொலைக்காட்சித் தொடர் ஸ்ரீரங்கா பூஜையுடன் துவங்கப்பட்டது.

ஸ்ரீ ரங்கத்தில் கோவில் கொண்டு இருக்கும் அரங்கனின் வரலாறு , மற்றும் மாபெரும் வைணவப் பெரியார்களைப் பற்றி பேச இருக்கும் இந்தத் தொடர்,
விரைவில் பிரபல தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாக இருக்கிறது.

“திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா தவம் புரியவே, தவத்தில் மகிழ்ந்து திருமால் பிரணவாகார விமானத்தை பரிசளித்தார்!

பிரம்மாவின் வம்சத்தவரால் சத்ய லோகத்தில் பூஜிக்கப்பட்டு இஷ்வாகுவின் தவத்தினால் அயோத்தி வந்து அவரின் வழிதோன்றல்களான, தசரதருக்கு பின் ஸ்ரீராமர் வரை பூஜிக்கப்பட்டு,

இலங்கையை விட்டு சீதையை மீட்டு வர பேருதவியாக இருந்த விபிஷணனுக்கு ஸ்ரீராமர் மேற்படி ஸ்ரீரங்க விமானத்தை பரிசளித்தார்.

அவர் இலங்கை செல்லும் போது பூமியில் ஒரு சிறுவனிடம் கொடுத்து விட்டு நித்ய அனுஷ்டானத்தை முடித்து வருவதற்குள் அனந்த பீடத்தில் ஸ்ரீரங்க விமானத்தை வைத்திடவே,
அதை அங்கிருந்து அசைக்க இயலாததால் அவற்றை சோழர்கள் வசம் ஒப்படைத்தார், சோழ வம்சத்தினர் கோயில் கட்டிப் பராமரித்தனர்.

கமலவல்லி, சேரகுலவல்லி போன்ற தாயார்களை மணந்து, பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களால் பூலோக வைகுண்டம் என்று பிரசித்தி பெற்று,

பிற்காலத்தில் நாதமுனிகள், ஆளவந்தார், ராமானுஜர், தேசிகர், மணவாள மாமுனிகள் போன்ற ஆச்சாரியர்கள் யாவரும் சிரமேற் கொண்டு கோவிலைப் பராமரித்து வந்தனர்.

இந்த வரலாறு எல்லாம் இந்தத் தொடரில் வரும் என்கிறது படைப்புக் குழு .