நாடு திரும்பினார் பிரதமர் மோடி

ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்றிருந்த பிரதமர் இன்று இரவு புதுடில்லி திரும்பினார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கு இன்று (செப்.,27) நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்.02) ஜப்பான் சென்றார்.
அங்கு நடந்த இறுதி சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்தினார்.பின்னர் பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி தனியாக சந்தித்தார். ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு இன்று நள்ளிரவில் புதுடில்லி திரும்பினார். பிரதமர் மோடி.