இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கியில் காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் பெண்கள் ஹாக்கி காலிறுதிப்போட்டியில் இந்திய அணி, மூன்று முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

இதில், சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறுவது இதுவே முதன்முறையாகும். அரையிறுதியில் அர்ஜென்டினா உடன் மோதுகிறது.