‘ஸ்பெல்லிங் பீ:’ தொடர்ந்து கலக்கும் இந்திய வம்சாவளி குழந்தைகள்

அமெரிக்காவில் பள்ளிக் குழந்தைகளுக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற போட்டி ‘ஸ்பெல்லிங் பீ’. இதில், கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய – அமெரிக்க குழந்தைகள்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வருகின்றனர்.

கோவிட் பெருந்தொற்று பாதிப்பால் 2020ம் ஆண்டு இந்தப் போட்டி நடைபெறவில்லை. கடைசியாக 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 8 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்திய – அமெரிக்க குழந்தைகள்.

இந்நிலையில், இந்த ஆண்டு ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி ஆன்லைன் முறையில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தவர். அதில், 209 குழந்தைகள் தேர்வாகினர். அவர்களில் 70 பேர் இந்திய – அமெரிக்கர்கள். பல்வேறு சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இறுதிச் சுற்று ஜூலை 8ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ள, 11 பேரில் ஒன்பது பேர் இந்திய – அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.