- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு
புதுடில்லி-குரங்கு அம்மை தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்வது தொடர்பாக நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
உலகெங்கும், 75க்கும் மேற்பட்ட நாடுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில், இதுவரை, ஒன்பது பேருக்கு இந்த நோய் தொற்று உறுதியாகி உள்ளது.இதையடுத்து, குரங்கு அம்மை பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முக கவசம் அணிவது, கிருமிநாசினி வாயிலாக சுத்தப்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.
குரங்கு அம்மை தொற்று அறிகுறி உள்ளோர் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த நோய் தொற்று பரவலை தடுப்பது குறித்து, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அவசரகால மருத்துவ உதவி அமைப்பின் இயக்குனர் டாக்டர் எல்.சுவஸ்தி சரண் தலைமையில், புதுடில்லியில் நேற்று இந்தக் கூட்டம் நடந்தது. இதில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, தேசிய நோய் கட்டுப்பாட்டு அமைப்பு, உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.