ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 66 பேர் இந்திய வம்சாவளியினர் – அமெரிக்கா தகவல்

உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறியப்படுகிற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளிகள் 66 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தகவலை 2020-ம் ஆண்டின் பயங்கரவாதம் பற்றிய அறிக்கையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடும்போது, “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2039-ஐ அமல்படுத்துவதில் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது.
நவம்பர் மாத நிலவரப்படி, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இந்திய வம்சாவளிகள் 66 பேர் உள்ளனர். கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு எந்தவொரு வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளும் திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.