ஹைத்தி அதிபர் பாதுகாவலர்களால் படுகொலை

ஹைத்தி அதிபர் ஜோவெனெல் மயிஸ், அவரது இல்லத்தில் பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ள அந்நாட்டு இடைக்கால பிரதமர் ஜோசப், தாக்குதல் மனிதநேயமற்றது. வெறுப்பை தரக்கூடியது. நாட்டின் பாதுகாப்பு கட்டுக்குள் உள்ளது. போலீசார் மற்றும் ஆயுதப்படையினர் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு உள்ளது. முக்கிய இடங்களுக்கு, பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்து உள்ளார். அதிபர் படுகொலையை தொடர்ந்து, தன்னை தானே அதிபராகவும் ஜோசப் அறிவித்துள்ளார்.

அதிபர் படுகொலையை தொடர்ந்து, தலைநகர் போர்ட் அவ் பிரின்ஸ் நகர சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் வீடுகளுக்குள் உள்ளனர். ஒரு சில இடங்களில் திறந்திருந்த கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட மவுசிக்கு 53 வயதாகிறது. பார்லிமென்ட் கலைக்கப்பட்டதை தொடர்ந்தும் அவர் அதிபர் பதவியில் நீடித்து வந்தார். சட்டப்படி தான் பதவியில் நீடிப்பதாக கூறினார். ஆனால், அதிகாரத்தில் நீடிப்பதற்காக சதி செய்வதாக குற்றம்சாட்டின.கடந்த 2010ம் ஆண்டில் ஹைத்தியில் தாக்கிய பூகம்பம் மற்றும் 2016ல் புயலாலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் இருந்து மீள்வதற்குள், பணவீக்கம், உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், அதிபரும் அவரது ஆதரவாளர்களும் மறுத்து வந்தனர். இந்த ஆண்டு இறுதியில் ஹைத்தியில் அதிபர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.