- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

வெள்ளத்தில் மூழ்கிய சிட்னி: 50 ஆயிரம் பேர் பாதிப்பு
சிட்னி:கனமழை காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 50 லட்சம் பேர் வசிக்கும் சிட்னி நகரம் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, சிட்னி நகருக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு அரசு எச்சரித்துள்ளது. மேலும் வீடுகளில் சிக்கியுள்ளோரை படகுகள் மூலம் மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே, நியூ சவுத் வேல்ஸ் கடற்பகுதியில், 21 பேருடன் தத்தளித்த சரக்கு கப்பலை துறைமுகத்திற்கு இழுத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.ஆனால், கடும் சூறாவளி வீசியதால், அப்பணி தோல்வியடைந்தது. இதையடுத்து, கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.