எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது, எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது என்றார். மேலும் அவர் கூறும் போது, “  எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வாண்டிற்காக மீதமுள்ள மாதங்களில் செலவழிக்க ஒரே தவணையாக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்படும். அடுத்த நிதியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 5 கோடி இரண்டு தவணைகளாக விடுவிக்கப்படும்” என்றார்.