கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா

– பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் மேலும் 314- பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 01 ஆயிரத்து 835- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,048- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 7,085- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்து 94 ஆயிரத்து 435- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 73,733- ஆக உள்ளது. கொரோனா தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 62,219- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 10.57- சதவிகிதமாக உள்ளது.