தமிழகத்தில் 1,542 பேருக்கு கொரோனா: 16-வது நாளாக பாதிப்பு குறைவு

தமிழகத்தில் கடந்த 11-ந் தேதி 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடந்து தமிழகத்தில் பாதிப்பு குறைந்த வண்ணமே இருந்தது. அந்த வகையில் 15-வது நாளாக 1,542-பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,542 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,793-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை17,797 ஆக உள்ளது.