கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 30,007 பேருக்கு தொற்று

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக, 30,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1,81,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 18,997 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 37,11,625 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 162 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 20,134 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,66,397 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 18.03 சதவிகிதமாக உள்ளது என்று கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஓணம் பண்டிகைக்காக அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அடுத்த 7-10 நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் மாநில சுகாதார மந்திரி வீணா வர்கீஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.