அணுசக்தி யுரேனியத்துடன் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன கப்பல் !!

அணுசக்தி யுரேனியத்துடன் இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன கப்பல் !!

இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அணுசக்திக்காக பயன்படுத்தப்படும் யுரேனியம் ஏற்றிய சீனாவிற்கு சொந்தமான MV BBC Naples என்ற கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவை தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் யுரேனியம் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல்.அனில் ரஞ்சித் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இப்போது இந்தக் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து வெளியேறிவிட்டது என்று இலங்கை அரசு தரப்பு தெரிவிக்கிறது. இலங்கைக்குள் ரசாயன பொருட்களை விமானத்தின் ஊடாகவோ கப்பலின் ஊடாகவோ கொண்டு வருவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவையிடம் அனுமதி பெறுவது அவசியமானது என எச்.எல்.அனில் ரஞ்சித் கூறுகிறார். எனினும், குறித்த கப்பல் எந்தவித அனுமதியும்…

Read More

இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானம் 30 நாட்களுக்குத் தடை-கனடா அரசு

இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானம் 30 நாட்களுக்குத் தடை-கனடா அரசு

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பயணிகள் விமானம் வர 30 நாட்களுக்குத் தடைவிதித்து கனடா அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து யாரும் வருவதற்கு தடை விதித்துள்ளன. தற்போது இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பயணிகள் விமானம் அடுத்த 30 நாட்களுக்கு வருவதற்குத் தடை விதித்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக கனடா அரசு பிறப்பித்த நீண்ட நாட்கள் தடையாக இது அமைந்துள்ளது. அதேசமயம், சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையையும் கனடா அரசு விதிக்கவில்லை….

Read More

இந்திய விமானங்கள் தரை இறங்க லண்டன் விமான நிலையம் அனுமதி மறுப்பு

இந்திய விமானங்கள் தரை இறங்க லண்டன் விமான நிலையம் அனுமதி மறுப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. இதன் தாக்கம், பிற நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது.கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 7-ந் தேதிவரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 3 ஆயிரத்து 345 பேர் சென்றனர். அவர்களில் 161 பேருக்கு கொரோனா தொற்று பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 101 பேர், இந்தியாவில் உருவான உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.இதையடுத்து, இந்தியாவை சிவப்பு பட்டியலில் இங்கிலாந்து சேர்த்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் இருந்து வருவதற்கு ஏப்ரல் 23-ந் தேதி (இன்று) உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியில் இருந்து தடை அமலுக்கு வருகிறது. இங்கிலாந்து குடிமக்களாகவோ அல்லது அயர்லாந்து குடிமக்களாகவோ இருந்தால், முந்தைய 10 நாட்கள் இந்தியாவில்…

Read More

சீதாராம் யெச்சூரி மகன், காங்., மூத்த தலைவர் வாலியா கொரோனாவுக்கு பலி

சீதாராம் யெச்சூரி மகன், காங்., மூத்த தலைவர் வாலியா கொரோனாவுக்கு பலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மூத்த மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் வாலியாவும் கொரோனாவால் உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரி (34) கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திடீரென இன்று காலை அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சீதாராம் யெச்சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛எனது மூத்த மகனாக ஆசிஷ் யெச்சூரி கோவிட்…

Read More

ஆக்சிஜன் வினியோகத்தில் புதுமையான முறைகளை கடைபிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆக்சிஜன் வினியோகத்தில் புதுமையான முறைகளை கடைபிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி

நாடு முழுவதும் ஆக்சிஜன் வினியோகம் மற்றும் கையிருப்பை அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிப்பது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கினர். அப்போது, மாநிலங்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு மற்றும் ஆக்சிஜன் சப்ளை குறித்து மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து அதிகாரிகள் விளக்கினர். தற்போது, 20 மாநிலங்களுக்கு தினமும், 6,785 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அந்த மாநிலங்களுக்கு தினமும் 6,822 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை

கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை

மும்பை இண்டியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான கிரண் மோரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதுமில்லாத அவர் சென்னையில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கொரோனா கட்டுப்பாட்டு பயோ பப்பிள் வரம்புக்குள் கிரண் மோரே இருந்தார். மும்பையில் நடந்த ஆயத்த முகாம்களிலும் அவர் பங்கேற்றார். இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, க்ருணாள் பாண்டியா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் இதில் இடம்பெற்றிருந்தனர். வரும் 9-ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்காக அவர்கள் கடந்தவாரம் சென்னைக்கு வந்தனர். கிரண் மோரேவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதால், மற்ற வீரர்களின் உடல்…

Read More

இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு – 3 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு – 3 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியாவிடம் இருந்து பெற்ற கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனேகா கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை போட்டுக்கொண்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்த தகவலை இலங்கை சுகாதாரத்துறை மந்திரி பவித்ரா வன்னியரச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், ரத்த உறைவுக்கு அந்த தடுப்பூசி காரணம் அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாக அவர்…

Read More

பொது செய்தி தமிழ்நாடு ‘நீட்’ பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு

பொது செய்தி தமிழ்நாடு ‘நீட்’ பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான, இலவச, ‘நீட்’ பயிற்சியை மீண்டும் துவங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாநில அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், 7.5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதனால், பல அரசு பள்ளி மாணவர்கள், எளிதாக மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த ஒதுக்கீட்டில் சேர உள்ள மாணவர் களுக்கு, இலவச நீட் பயிற்சி, அரசு சார்பில், ஆன்லைன் வழியாக வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் இந்த பயிற்சியை மேற்கொண்டு உள்ளனர். பிளஸ் 2 தேர்வு மே, 5ல் நடக்க இருந்ததால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், நீட்…

Read More

ஸ்ரீ ராம நவமி – ஏப்ரல் 21

ஸ்ரீ ராம நவமி  – ஏப்ரல் 21

ஸ்ரீ ராம நவமி – ஏப்ரல் 21 ராம நவமி நமது இல்லங்களில் கொண்டாடி ராம நாம சங்கீர்த்தனம் செய்வோம் !! இந்த விடியோவை கிளிக் செய்து கண்டிப்பாக பார்க்கவும் … அனைவரோடும் பகிரவும் 👉 https://youtu.be/FRYS0UCO8Io 👈 தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் !!

Read More

பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன

கொரொனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், முடங்கியுள்ள பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன. இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. டில்லியில் 6 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஏராளமான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் காத்து கிடக்கின்றனர். அவர்களுக்கு பல சமூக அமைப்புகள் உதவி வருகின்றன. உணவு,…

Read More
1 2 3 4 5 162