சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; ஜனாபதி ஒப்புதல்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இடமாற்றம்; ஜனாபதி ஒப்புதல்

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி முதல் பதவி வகித்து வருபவர் சஞ்ஜிப் பானர்ஜி. கொல்கத்தா ஐகோர்ட்டில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த இவர், சென்னை ஐகோர்ட்டின்  50-வது தலைமைநீதிபதியாக நியமிக்கப்பட்டி ருந்தார். இந்த சூழலில், சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய  சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்ய  வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில், தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும், கொலிஜியத்தின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

Read More

மழை நின்ற பின்னரும் சென்னையில் 300 இடங்களில் வடியாத வெள்ளம்: அகற்றும் பணி தீவிரம்

மழை நின்ற பின்னரும் சென்னையில் 300 இடங்களில் வடியாத வெள்ளம்: அகற்றும் பணி தீவிரம்

காற்றழுத்த மண்டலம் நேற்று சென்னை அருகே கரையை கடந்த பிறகு மழைப்பொழிவு கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக மீட்பு படையினர் நேற்று இரவே மழை நீரை அகற்றும் பணியில் அனைத்து பகுதிகளிலும் களம் இறங்கினார்கள். விடிய விடிய மழை நீர் அகற்றும் பணி நடந்தது. இன்று காலை சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. என்றாலும் தொடர்ந்து மழை நீர் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்பு சென்னை நகரில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது புறநகர் பகுதிகளில் தான் மிக மிக அதிக பாதிப்பு காணப்பட்டது. ஆனால் இந்த தடவை சென்னையில் அனைத்து இடங்களுமே வெள்ளக்காடாக மாறிவிட்டது. குறிப்பாக மத்திய சென்னை பகுதிகளிலும் அதிக…

Read More

எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி

எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மத்திய அரசு அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அமைச்சரவை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று தெரிவித்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது, எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது என்றார். மேலும் அவர் கூறும் போது, “  எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வாண்டிற்காக மீதமுள்ள மாதங்களில் செலவழிக்க ஒரே தவணையாக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கப்படும். அடுத்த நிதியாண்டு முதல்…

Read More

தமிழகத்தில் நாளையும் 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளையும் 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற  இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும்  8 மாவட்டங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.  மேலும், வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், காஞ்சீபுரம், விழுப்புரம்,…

Read More

விண்வெளியில் நடந்து சீன வீராங்கனை சாதனை

விண்வெளியில் நடந்து சீன வீராங்கனை சாதனை

சீனாவைச் சேர்ந்த ஒரு பெண், முதன் முறையாக விண்வெளியில் நடந்து சாதனை படைத்து உள்ளார். விண்வெளியில் ‘டியன்ஹி’ என்ற ஆய்வு நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. அக்., 16ல் இந்த ஆய்வு நிலையத்திற்கு வங் யபிங் என்ற பெண் உட்பட மூன்று பேர் ‘ஷென்ஷோ – 13’ விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். ‘இவர்கள் மூவரும் டியன்ஹி ஆய்வு நிலையத்தில் ஆறு மாதங்கள் தங்கி கட்டுமான பணிகளை மேற்கொள்வர்’ என, சீனா தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று டியன்ஹி ஆய்வு நிலையத்தில் இருந்து, வங் யபிங், ஜாய் ஆகியோர் வெளியேறி விண்ணில் நடந்து, வெளிப்புற கட்டுமான பணிகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு, டியன்ஹியில் இருந்த மூன்றாவது விண்வெளி வீரரான யி…

Read More

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை: இரண்டாவது நாளாக முதலமைச்சர் நேரில் ஆய்வு

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை: இரண்டாவது நாளாக முதலமைச்சர் நேரில் ஆய்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில்  வெள்ளம் ஓடுவதால் வாகனங்கள்  நீரில் ஊர்ந்து செல்கின்றன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் இன்று நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், புதுக்கோட்டை,அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தஞ்சை,…

Read More

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா

– பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பதிவு: நவம்பர் 05,  2021 18:19 PM திருவனந்தபுரம், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,580- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் மேலும் 314- பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 01 ஆயிரத்து 835- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,048- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 7,085- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 48 லட்சத்து 94 ஆயிரத்து 435- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை…

Read More

அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட அணையை ஆய்வு செய்தது இல்லை – துரைமுருகன் பேட்டி

அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட அணையை ஆய்வு செய்தது இல்லை – துரைமுருகன் பேட்டி

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 138.80 அடியாக உள்ள நிலையில்  தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முல்லை பெரியாறு  அணையில் ஆய்வு செய்த பின்பு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தனது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் முல்லை பெரியாறு அணையை ஓ.பி.எஸ் ஒருநாள் கூட பார்வையிடவில்லை; இப்போது போராட்டம் நடத்துகிறார்களா? கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தது…

Read More

ஆர்யன் கான் அப்பாவி, அவரிடம் போதை பொருள் கைப்பற்றப்படவில்லை – சாம் டிசோசா தகவல்

ஆர்யன் கான் அப்பாவி, அவரிடம் போதை பொருள் கைப்பற்றப்படவில்லை – சாம் டிசோசா தகவல்

பதிவு: நவம்பர் 04,  2021 18:40 PM மும்பை, போதை பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் சொகுசு கப்பல் போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கைது செய்தனர். இதில் போதை பொருள் வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில் ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசியவர்கள் தொழில் அதிபர் சாம் டிசோசா மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சாட்சி கிரன் கோசவி எனவும் கூறப்படுகிறது. எனவே ரூ.25 கோடி பேரம் தொடர்பாக போலீசார் சாம் டிசோசாவிடம் விசாரணை நடத்துவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தநிலையில்…

Read More

கொரோனா தடுப்பு மாத்திரைகள் இங்கிலாந்து அரசு ஒப்புதல்

கொரோனா தடுப்பு மாத்திரைகள் இங்கிலாந்து அரசு ஒப்புதல்

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.  தடுப்பூசியை விட மாத்திரை தயாரிப்பது எளிது என்பதால், விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என நிபுணர்கள் தகவல்…

Read More
1 2 3 4 185