50 சதவீத சிறுவர்கள் தடுப்பூசி போட்டனர்: இளைய தலைமுறை வழி காட்டுகிறது மோடி பெருமிதம்

50 சதவீத சிறுவர்கள் தடுப்பூசி போட்டனர்: இளைய தலைமுறை வழி காட்டுகிறது மோடி பெருமிதம்

15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதம்பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.இதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும்வகையில், பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-இளைய தலைமுறை வழி காட்டுகிறது. இது ஊக்கம் அளிக்கும் செய்தி. இதே உத்வேகத்தை கடைபிடிப்போம். தடுப்பூசி செலுத்துவதும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதும் முக்கியம். நாம் ஒன்றாக இந்த தொற்றை எதிர்த்து போராடுவோம்.

Read More

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் மந்திாி ராஜேஷ் தோபே தகவல்

லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம் மந்திாி ராஜேஷ் தோபே தகவல்

லதா மங்கேஷ்கரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திாி ராஜேஷ் தோபே கூறியுள்ளார். பாடகிக்கு கொரோனா பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் வசித்து வருகிறார். 92 வயதான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் தென்மும்பையில் உள்ள பிரிச் கேண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லேசான கொரோனா அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான அறிகுறிகள் மட்டும் உள்ள போதும், வயது மூப்பின் காரணமாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிப்பதாக டாக்டர்கள் கூறியதாக லதா மங்கேஷ்கரின் உறவினர் ராச்னா ஷா கூறியிருந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் இந்தநிலையில் லதா…

Read More

மலையில் தோன்றி: கோஷம் எழுப்பிய பக்தர்கள் பரவசம்

மலையில் தோன்றி: கோஷம் எழுப்பிய பக்தர்கள் பரவசம்

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் (திருவாபரணங்கள்) அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றார். இதனையடுத்து மகரஜோதி நாளில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகரசங்கராந்தி பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படும். இதன்படி இன்று மதியம் இந்த பூஜை நடைபெற்றது….

Read More

கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் – பிரதமர் மோடி பேச்சு

கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் – பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, நாடு முழுவதும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். மாநில முதல்-மந்திரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவில் 92% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 70% பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி. நாட்டில் தொண்ணூற்று இரண்டு சதவீத வயது வந்தோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். முந்தைய கொரோனா தொற்றுகளுடன் ஒப்பிடும் போது ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவுகிறது. பதற்றமடைய வேண்டாம்,…

Read More

“தைப் பிறந்தால் வழி பிறக்கும்” – தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு!

“தைப் பிறந்தால் வழி பிறக்கும்” – தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்து பிரதமர் மோடி பேச்சு!

புதுடெல்லி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகையில் மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடியில் ரூ. 24 கோடி மதிப்பில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன மையக்கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மின்னணு நூலகம் உள்ளிட்ட 12 பிரிவுய்களுடன் கூடிய பிரமாண்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி பிரதமர் மோடி பேசியதாவது:- தை பிறந்தால் வழி பிறக்கும் என தமிழில் பேசி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார். தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது…

Read More

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா

லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பதிவு: ஜனவரி 10, 2022 16:21 PM புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை உலுக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் கொரொனா பாதிப்புக்கு எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை. அந்த வகையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜ்நாத்சிங், லேசான அறிகுறிகளுடன் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நான் வீட்டுத்தனிமையில் உள்ள்ளேன். சமீபத்தி என்னை தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”…

Read More

ஏரியில் பாலம் கட்டும் சீனாவால் நமக்கு என்ன பிரச்சினை?

ஏரியில் பாலம் கட்டும் சீனாவால் நமக்கு என்ன பிரச்சினை?

அடாவடிக்கு பெயர் போன நாடாக சீனா மாறி வருகிறது. ஒற்றை கட்சி ஆட்சி என்பதாலோ என்னவோ, உலகத்துக்கே தான் வைத்தது தான் சட்டம் என்ற நினைப்பு, சீன அதிபர் ஜின்பிங்குக்கு வந்து விட்டது போலும். பதிவு: ஜனவரி 05, 2022 08:38 AM ஒரு பக்கம் தைவானை ஆக்கிரமிக்க சீனா முயற்சித்து வருகிறது. இன்னொரு பக்கம், இந்தியாவுடன் சீனாவுக்கு நீண்ட நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிற சூழலில் இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கிறது. கல்வான் தாக்குதல் இதற்கிடையேதான் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய படைகளுடன் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் முதல் மோதல்போக்கில் சீன துருப்புகள் ஈடுபட்டு வருகின்றன. அதே ஆண்டின்…

Read More

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா… டெல்லி மருத்துவர் பேட்டி

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா… டெல்லி மருத்துவர் பேட்டி

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவற்றில் டெல்லி, மராட்டியம் அதிக அளவிலான ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன. இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த மருத்துவர் எஸ். சந்திரா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் 3வது அலையின் தொடக்கத்தில் நாடு உள்ளது என காட்டுகிறது. இந்த காலகட்டத்தில், ஒமைக்ரான் வகை கொரோனா ஆதிக்கம் செலுத்தும். டெல்டா வகை கொரோனாவை விட இதன் அறிகுறிகளின் கடுமை மிக குறைவாகவே உள்ளது. அதனால் பாதிப்பு அதிகளவில் இருக்க…

Read More

ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 10ந்தேதி வரை திறக்கப்படாது என்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு திருவிழா என அடுத்தடுத்து பண்டிகைகள் மக்களால் கொண்டாடப்பட உள்ள சூழலில், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ துறை உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

Read More

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விரைவில் விலக்கு

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விரைவில் விலக்கு

பெங்களூரு: கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், இதுதொடர்பான சட்டம் சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் கொண்டுவரப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். விரைவில் விலக்கு கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் உப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட மந்திரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:- பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில கட்டுப்பாடுகளால் தொந்தரவை அனுபவித்து வருகின்றன. அதனால் கர்நாடகத்தில் கோவில்களுக்கு…

Read More
1 2 3 189