கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரஷ்யாவில் ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ரஷ்யாவில் ஒருவாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு

ரஷியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், ரஷியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையிலும் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாததே ரஷியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம் என மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர். ரஷியாவில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவிகிதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்ததாத 60 வயதிற்கு மேற்பட்டோர்…

Read More

தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 26,90,633 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,948 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,418 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,40,627 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 14,058 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை…

Read More

பல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் – அரசு தரப்பு

பல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் – அரசு தரப்பு

மும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு போதை விருந்து நடந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து கப்பலில் இருந்த பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். தற்போது அவர் ஆர்தர் ரோடு சிறைச்சாறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஆர்யன்கான் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு…

Read More

சென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி

சென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்து வருபவர் சங்கர் ஜிவால்.  இவர் பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read More

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை 14 மற்றும் 15ம் தேதி அரசு விடுமுறை வழங்கப்படும் நிலையில் சனிக்கிழமை சேர்த்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு கோரிக்கையை ஏற்று 16-ஆம் தேதி அதாவது சனிக்கிழமை விடுமுறை வழங்கியுள்ளது. இந்நிலையில் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி சேர்த்து  சனிக்கிழமை விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Read More

வட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் (அக்.8,9) வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய…

Read More

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால், அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரும், ஆப்கன் மக்களும் வெளியேற முயற்சித்தனர். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தலீபான்கள் அனுமதி அளித்தனர். இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படை வீரரான பென் சால்டர் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்தார். அவர் காபூலில் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது தனது தொழில்நிறுவனத்தில் பணியாற்றிவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பி செல்ல பென் சால்டர் உதவி செய்துள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் எல்லையில் அவர்கள் அனைவரையும் தலீபான்கள் தடுத்து நிறுத்தினர்….

Read More

லகிம்பூர் கேரி, சிதாபூர் பகுதிகளில் இணைய தள சேவை முடக்கம்

லகிம்பூர் கேரி, சிதாபூர் பகுதிகளில் இணைய தள சேவை முடக்கம்

உத்தர பிரதேசத்தில் உள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி, சிதாபூரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், லகிம்பூர் கேரி மற்றும் சிதாபூர் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணைய சேவை முடக்கம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, இன்று லகிம்பூர் கேரி மாவட்டம் வர திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி, சிதாபூர்…

Read More

சஹீன் புயல்:தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சஹீன் புயல்:தமிழகம் உள்பட 7 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள சஹீன் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாற உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 4ம் தேதி வரை பீகார்,  மேற்கு வங்காளம்,  சிக்கிம்,  தமிழ்நாடு,  கேரளா,  கர்நாடகா,  குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு  கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் உள்பகுதிகள் உட்பட தமிழகம், கேரளாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். இதனால் அக்டோபர் 1 முதல் 4ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை அக்டோபர் 4ம் தேதி காலை வரை குஜராத் கடல் பகுதி…

Read More

தாயைக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை – புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தாயைக் கொன்ற மகனுக்கு தூக்கு தண்டனை – புதுக்கோட்டை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் மறவன்பட்டியைச் சேர்ந்தவர் திலகராணி(45). இவருக்கு, 5 மகன்கள் உள்ளனர். மது அருந்தி கொடுமை செய்த கணவனை 2006ம் ஆண்டு திலகராணி கொலை செய்தார். அப்போது, ஐந்தாவது மகன் முத்து, நான்கு மாத கருவாக வயிற்றில் இருந்தான். இதில் திலகராணி, நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று, விடுதலையானார். தாய் சிறை சென்றது முதல் தாத்தா வீட்டில் மற்ற 4 மகன்களும் வசித்து வந்தனர். தந்தையை கொலை செய்து விட்டு ஜெயிலுக்கு சென்று வந்ததால் தாயுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தனர். திலகராணியுடன், சிறையில் இருந்த போது, பிறந்த 5வது மகன் முத்து மட்டும் இருந்தான். அப்பகுதியில் உள்ள கணவனுக்கு சொந்தமான வீட்டில்,…

Read More
1 2 3 45