பாக்கிஸ்தான் மீது ஈரான் சர்ஜிக்கல் தாக்குதல் !!

பாக்கிஸ்தான் மீது ஈரான் சர்ஜிக்கல் தாக்குதல் !!

பாகிஸ்தானில் பிணைக் கைதிகளாக அடைத்து வைத்திருந்த தங்கள் நாட்டு வீரர்களை, ஈரான் ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி மீட்டுள்ளது. பாகிஸ்தான் ஈரான் எல்லையோரம் உள்ள சிஸ்தான் பகுதியில் இருந்து ஜெய்ஷ் அல் அதல் எனும் பயங்கரவாத குழு 11 ஈரானிய வீரர்களை கடந்த 2018ம் ஆண்டு கடத்தியது. பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 11 பேரில் 5 பேரை 2018ல் விடுவித்தது. பின்னர் 2019ல் 4 பேரை விடுதலை செய்த பாகிஸ்தான், மீதமுள்ள 2 பேரை விடுவிக்காமல் தாமதித்தது. அதுமட்டுமல்லாமல், 2019 பிப்ரவரியில் ஈரான் துணை ராணுவத்தினர் வந்த பேருந்து மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் முகாம் மீது கடந்த…

Read More

மியான்மரில் ராணுவ ஆட்சி சூச்சி கைதால் பெரும் பதற்றம்

மியான்மரில் ராணுவ ஆட்சி சூச்சி கைதால் பெரும் பதற்றம்

மியான்மர் நாட்டில், அரசு நிர்வாகத்தை, ராணுவம் நேற்று அதிரடியாக தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அரசு ஆலோசகர் ஆங் சான் சூச்சி உட்பட பலரும் கைது செய்யப்பட்டதால், பெரும் பதற்றம் நிலவுகிறது. மியான்மரில், கடந்த நவம்பர் மாதம், பொதுத் தேர்தல் நடந்தது. பார்லிமென்டின் இரு சபைகளிலும் மொத்தமுள்ள, 476 இடங்களில், 396 இடங்களைக் கைப்பற்றி, ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி, அமோக வெற்றி பெற்றது. இது, 2015 பொதுத் தேர்தலில் வென்ற இடங்களைக் காட்டிலும் அதிகம். ராணுவ கட்சியாக கருதப்படும், ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி, 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.இதையடுத்து, தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக, ராணுவத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வத்து…

Read More

அமெரிக்காவில் மீண்டும் கருப்பின சிறுமி மீது போலீசார் தாக்குதல் !!

அமெரிக்காவில் மீண்டும் கருப்பின சிறுமி மீது போலீசார் தாக்குதல் !!

அமெரிக்க அரசியலில் கருப்பின மக்களின் உரிமைகள், சமத்துவம், சம வாய்ப்புகள் பற்றிய பிரச்சினைகள் பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தநிலையில் அமெரிக்காவின் வெள்ளையின போலீசார் இனப்பாகுபாடு காட்டுவதாகவும் கருப்பின குற்றவாளிகளிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாகவும் காலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது ஓர் சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அமெரிக்க வெள்ளை இன போலீசார்மீது கடுமையான விமர்சனத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் ரோச்சஸ்டர் மாகாணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 9 வயது சிறுமியை காவலர்கள் தங்கள் காருக்குள் ஏற்ற முற்பட்டனர். அப்போது சிறுமி கட்டுக்கடங்காமல் எதிர்த்து போலீசாரை தாக்கியதால் அவரை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே எனப்படும் காரத்தன்மை கொண்ட ஸ்பிரேயை சிறுமியின் முகத்தில்…

Read More

கனடா பிரதமர் ஆதரிக்கும் காலிஸ்தானி கூட்டத்தை மோடி இன்று வறுத்தெடுப்பார் !!

கனடா பிரதமர் ஆதரிக்கும் காலிஸ்தானி கூட்டத்தை மோடி இன்று வறுத்தெடுப்பார் !!

டில்லியில் விவசாயிகள் பேரணியில், அத்துமீறி செங்கோட்டைக்குள் நுழைந்து சீக்கிய கொடி ஏற்றி அத்துமீறலில் ஈடுபட்ட காலிஸ்தானி சீக்கிய தீவிரவாதிகள் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீசாருக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, சிலர் அனுமதிக்கப்படாத பகுதிகளிலும் பேரணி நடத்தினர். டில்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை வரை நுழைந்து, அங்கு சீக்கிய மத கொடியை ஏற்றினர். போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற போது வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. டில்லியின் சாந்திவன் ரெட் லைட் பகுதியில் ஆயிரகணக்கானோர் கூடியதுடன், தடுப்புகளை டிராக்டர் மூலம் தகர்த்தனர். போலீசாரை தாக்கிவிட்டு…

Read More

உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இதனையடுத்து அங்கு பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் என வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தும் கண்டறியப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று அதிதீவிரமாக பரவியது. இதனால் இங்கிலாந்து திக்குமுக்காடியது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இங்கிலாந்து உடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக பல நாடுகளும் அறிவித்தன. அதற்குள் சில நாடுகளில் உருமாறிய கொரோனா…

Read More

எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!

எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!

எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. சீனா இந்திய எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே அவ்வப்போது சண்டையும் நடக்கிறது. மேலும் எல்லையில் சீன ராணுவத்தினர் அதிகளவில் குவித்துள்ளது. பதிலுக்கு இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லை பிரச்னையை தீர்க்க இரு நாட்டு அதிகாரிகளும் பேசுகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு சிக்கிம் எல்லையில் நகு லா என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் அத்துமீறி ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்தனர். இதில்…

Read More

‛மாடர்னா’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

‛மாடர்னா’ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசியான. மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார். சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் கதிகலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும், இதுவரை 1.98 கோடி பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். 3.43 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, கொரோனா தடுப்புக்கான மாடர்னா மருந்து கண்டுபிடிப்பு, அமெரிக்க மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன், கடந்த 21ம் தேதி, மாடர்னா மருந்தின் முதல் டோசை போட்டுக்கொண்டார். இந்நிலையில், துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், வாஷிங்டனில் உள்ள யுனிடெட் மெடிக்கல் சென்டரில்,…

Read More

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலுச் மரணத்தில் மர்மம் உள்ளதாக சந்தேகித்துள்ள இந்தியா, அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், அரசு மற்றும் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர், கரிமா பலுச், 37. பலுசிஸ்தான் மாகாணத்தில் வசித்து வந்த இவர், மக்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வந்தார். பின்னர், வட அமெரிக்க நாடான கனடாவில் குடிபெயர்ந்து வசித்து வந்த கரிமா பலுச், கடந்த, 20ம் தேதி திடீரென காணாமல் போனார். இதையடுத்து, அவரை தேடும் பணிகளில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், டொரோன்டோ மாகாணத்தில், அதற்கு அடுத்த நாள், உயிரிழந்த நிலையில், அவரின் உடல்…

Read More

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பல ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். 42 வயதான மக்ரோங், ஏழு நாட்களுக்குத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக எலிசி அரண்மனையில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்ரோங்கின் 67 வயதான மனைவி பிரிஜெட் மக்ரோங்குக்கு எந்த கொரோனா அறிகுறியும் இல்லை என்றாலும், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, அதிபர் மக்ரோங், பிரன்ஸ் நாட்டின் நாடாளுமன்றத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதில் பிரான்ஸின் பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதே போல கடந்த திங்கள்கிழமை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பான ஓ.இ.சி.டி…

Read More

சீனாவின் குட்டை வெளிப்படுத்த முயன்ற பத்திரிகையாளர் கைது !!

சீனாவின் குட்டை வெளிப்படுத்த முயன்ற பத்திரிகையாளர் கைது !!

கடந்த ஆண்டு டிச., மாதம் சீனாவின் ஒரு வூஹான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகிற்கு பரவியது. பரிசோதனை கூடத்தில் இருந்த வவ்வால் இறகு சாம்பிள் குளிர்பதனப் பெட்டியில் இருந்து தவறுதலாக குப்பையில் கொட்டப்பட்டது. இது அருகிலிருந்த இறைச்சி சந்தைக்கு சென்று வாடிக்கையாளர்கள் அதனை சாப்பிட்டு கொரோனா வைரஸ் அவர்களது நுரையீரலை பாதித்து உலகம் முழுவதும் பரவியது என்று சீன அரசு கூறுகிறது. ஆனால் எதிரி நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதா என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து கொரோனா தடுப்பு மருந்து சோதனை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்று கண்டுபிடிக்க வேண்டும்…

Read More
1 3 4 5 6 7 43