சிறந்த பொருளாதார திட்டம் வகுக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்

சிறந்த பொருளாதார திட்டம் வகுக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்

பொருளாதார திட்டங்களை ஆய்வு செய்து. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய சிறந்த பொருளாதார கொள்கை உருவாக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி 10 ஆண்டுக்கான பொருளாதார கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.

Read More

அடுத்த இருபது ஆண்டுகளில் இலங்கை எப்படியிருக்கும்! பொருளாதார ரீதியாக ஆரூடம் கணித்த ரணில்

அடுத்த இருபது ஆண்டுகளில் இலங்கை எப்படியிருக்கும்! பொருளாதார ரீதியாக ஆரூடம் கணித்த ரணில்

இலங்கை அடுத்த இரண்டு தசாப்தத்திற்குள் பொருளாதார ரீதியில் அதிக வருவாய்களை பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரூடம் வெளியிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற சமூகம் மற்றும் அறிவியல் கருத்துக்களத்தில் உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். அங்கு பேசிய அவர், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பங்களை ஊக்குவிப்பதன் மூலமே இந்த இலக்கை அடைய முடியும். இலங்கை இப்பொழுது வரலாற்றில் புதிய பக்கத்திற்கு திரும்பியுள்ளது. இன்னும் குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியில் அதிக வருவாய்களை ஈட்டும். இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம் செழிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் விடுவிப்பு

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் விடுவிப்பு

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர். தற்போது சுமார் பத்து ஏக்கர் காணியே இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

Read More

தலதா வளாகத்தில் இந்துக் கோயில் எழுப்ப முடியுமா? பாராளுமன்றத்தில் கேள்வி

தலதா வளாகத்தில் இந்துக் கோயில் எழுப்ப முடியுமா? பாராளுமன்றத்தில் கேள்வி

சிங்கள கலை வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.கண்டிய நடனம் உட்பட பல சிங்கள கலை கலாச்சாரங்களுக்கு மூலம் தமிழ் கலாச்சாரங்களே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கலைகலாச்சாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது இதன் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பில் பல வகையான கருத்துகளையும் முன்வைத்தார். இலங்கையில் சிங்கள கலைகள் வளர்ச்சியடைய பல வகையிலும் முன்னுதாரணமாகவும், உதவியாகவும் அமைந்தது தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களே. மேலும் இலங்கை பாட புத்தகங்களில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் வலுக்கட்டாயமாக மறைக்கப்படுகின்றன, அதற்கு பதில் சிங்கள மன்னர்களின் வரலாறுகள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Read More

புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கும் அரசாங்கம்: தேசிய சுதந்திர முன்னணி

புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கும் அரசாங்கம்: தேசிய சுதந்திர முன்னணி

இனவாத, பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்களை மகிழ்விப்பதற்காக மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவுக்கு பதவிக்காலத்தை நீடிக்காது அவரை ஒய்வுபெற செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளில் ஆஜராகிய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கிளிநொச்சியை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றி, நந்திக்கடல் களப்பில் புலிகளின் தலைவரை அழித்த 53 வது படைப் பிரிவுக்கு தலைமை தாங்கிய கமல் குணரட்னவுக்கு பணி நீடிப்பு வழங்காது, ஒய்வுபெற செய்துள்ளனர். தமக்கு அடங்காத அனைவரையும் வேட்டையாடவே நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது. எனினும் நீதிமன்றம் மீது எங்களுக்கு…

Read More

சுவிஸில் முதன்முறையாக இலங்கை கலாசார, வர்த்தக உணவுப் பெருவிழா

சுவிஸில் முதன்முறையாக இலங்கை கலாசார, வர்த்தக உணவுப் பெருவிழா

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இலங்கையின் கலாசார, வர்த்தக மற்றும் உணவு பெருவிழாவை நடத்த உள்ளது. இந்த விழா 09, 10, 11 – 09 – 2016 திகதிகளில் நடைபெறவுள்ளதாக துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. மேற்படி பெருவிழாவிற்கான அனுமதி இலவசம், விழாவில் 60 வீத இலங்கையர்களும், 40 வீதமான சுவிஸ் பிரஜைகளும் என 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் துணைத் தூதுவர் விதர்சன முனசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். சுவிஸ் வாழ் இலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரு விழாவில் இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள…

Read More

AK 47 துப்பாக்கி ரவையால் அ..எழுத முனையும் மழலைகள்!

AK 47 துப்பாக்கி ரவையால் அ..எழுத முனையும் மழலைகள்!

முள்ளிவாய்க்கால் முற்றங்களில் இன்னமும் அழிந்து விடாமல் துப்பாக்கி சன்னங்கள் ஆங்கங்கே இருக்கின்றது. அவற்றை சிறுவர்கள் பல்வேறு கோணத்தில் ஆராய முற்படுகின்றனர். முள்ளிவாய்க்கால் கிழக்கில் வாழும் மூன்று வயது மழலை சிறுவன் ஒருவர் முற்றத்தில் கிடந்த AK47 துப்பாக்கி ரவை ஒன்றை எடுத்து தனது தாயிடம் குட்டி பென்சில் என்று காண்பித்த சமபவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. தற்காலிக வீட்டில் வசித்து வரும் குறித்த மழலை சிறுவன் தாய் காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த சமயம் முற்றத்தில் மறைந்திருந் துப்பாக்கி ரவை ஒன்றை எடுத்து தாயிடம் காட்டி அதன் தோற்றத்தை குட்டி பென்சில் என்று வர்ணித்துள்ளார். தனது பிள்ளை பொருள் ஒன்றை இன்னொரு பொருளுடன் ஒப்பிடும்…

Read More

யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

யார் அந்த அழகிய தேவதை: ஜி20 மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பாதுகாப்பு அதிகாரி

சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ஒட்டுமொத்த விருந்தினர்களின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஒரு பெண் பாதுகாப்பு அதிகாரி. சீனாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்த நாடு மேற்கொண்டிருந்தது. இதற்கென சிறப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்ட ராணுவ அதிகாரிகளை களமிறக்கியிருந்தது சீனா. அதில் ஒருவர்தான் ராணுவ அதிகாரி Shu Xin. இவரது புகைப்படங்கள் அங்குள்ள சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைராலாக பரவி வருகிறது. உலகத் தலைவர்கள் முக்கிய விடயங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் இருக்க, சீனாவின் சமூக வலைத்தளங்கள் மொத்தமும் இளம் ராணுவ அதிகாரி குறித்து ஸ்லாகித்து பேசிக்கொண்டிருந்தது. சீனாவின் தென் பகுதியில் அமைந்துள்ள குயியாங் நகரில் பிறந்து வளர்ந்தவர் என்றும்,…

Read More

எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்த ஈழ அகதிகள்

எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் கொடுத்த ஈழ அகதிகள்

அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை வழங்கிய விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள ஈழ அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தவராவார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் ஈழ அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் எட்வர்ட் ஸ்னோவ்டன் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் வழங்கிய நான்கு ஈழ அகதிகளை, அமெரிக்காவின் ஊடகங்கள் செவ்வி கண்டு செய்தி வெளியிட்டுள்ளன. ஈழ அகதிகளின் பாதுகாப்பில் இருந்த ஸ்னோவ்டன், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து தமது அனுபவத்தை பகிர்ந்துள்ள ஸ்னோவ்டன், தாம் எதிர்நோக்கியுள்ள…

Read More

மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா?

மரண தண்டனையில் இருந்து துமிந்த சில்வா தப்பிப்பாரா?

இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. எனினும் குறித்த மரணதண்டனை உத்தரவிற்கு எதிராக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துமிந்த சில்வாவின் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார். கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதில் துமிந்த சில்வா முக்கிய குற்றவாளியாக இனங்காணப்பட்டதுடன், இவருக்கு எதிராக வழக்கு விசாரணைகளும் நடைபெற்று வந்தன. அதன் படி குறித்த வழக்கில் இன்று துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
1 41 42 43