தென்கொரிய அதிபருக்கு எதிராக குற்ற விசாரணை தீர்மானம்

தென்கொரிய அதிபருக்கு எதிராக குற்ற விசாரணை தீர்மானம்

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் செனூரி கட்சி சார்பில் பார்க் ஜியுன் ஹை அதிபராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொரிய அரசியல் ஊழலில் ஈடுபட்ட சொய் சூன்-சில்லுடன், பார்க் ஜியுன் ஹை நெருங்கி பழகி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே பார்க் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்தன. இதை வலியுறுத்தி தலைநகர் சியோல் மற்றும் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக மறுத்தால் அவரை…

Read More

ஒபாமாவை தோற்கடிக்க டிரம்ப்பின் புதிய யுக்தி!

ஒபாமாவை தோற்கடிக்க டிரம்ப்பின் புதிய யுக்தி!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்புடன் இரவு விருந்து சாப்பிட வேண்டுமென்றால் 7 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். அது தொடர்பாக புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில், அவர் ஈடுபட்டு வருகிறார். தன் அரசில் புதிய நிதியமைச்சராக, பிரபல வங்கி அதிகாரி ஸ்டீவ் முனிச்சினை நியமிக்கபோவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதிக்கான பதவியேற்பு விழா ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் ஜனாதிபதி பதவியேற்பு விழா, அரசு செலவில் நடப்பது இல்லை. அதற்கு பதிலாக,…

Read More

Part 3 காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

Part 3 காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

கெரில்லாயிசத்தின் இருப்புநிலை கணக்கு குவாராயிச-காஸ்ட்ரோயிச இயக்கங்கள் சோசலிசப் புரட்சியின் புதிய கருவிகளாக பப்லோவாதிகள் பிரகடனம் செய்தவையாக ஆயின. அவர்களின் ஸ்தூலமான பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்க இந்த இயக்கங்களின் வர்க்கப் பண்பினை அவற்றின் தோற்றத்திலிருந்து திரைநீக்கிப் பார்க்கவேண்டும். வெனிசுலாவின் FALN இயக்கம் 1960களில் கியூப ஆதரவோடு அமைக்கப்பட்ட கெரில்லா இயக்கங்களுள் ஒன்றாகும். அந்த காலகட்டத்தின் இத்தகைய இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரது கருத்தினை மேற்கோள்காட்டுவோம். “நாம் வெனிசுலாவின் விடுதலைபற்றி பேசுகின்றபோது, நாம் அனைத்து இலத்தின் அமெரிக்காவின் விடுதலையையே அர்த்தப்படுத்துகிறோம். நம் அண்டை அயலில் உள்ளவர்கள் தத்துவரீதியாக முன்னணியில் உள்ளவர்கள். நாம் சர்வதேச ஐக்கியத்தை உண்மையான புரட்சிகர வழியில் செயல் உருப்படுத்திக்காட்டுவோம், ஆதலால் நாம் போராடக் கடமைப்பட்டுள்ளோம், ஏகாதிபத்தியத்தை துடைத்து…

Read More

பிடல் காஸ்ட்ரோ மரணம் வீதியில் இறங்கி கொண்டாடிய பொதுமக்கள்

பிடல் காஸ்ட்ரோ மரணம் வீதியில் இறங்கி கொண்டாடிய பொதுமக்கள்

கியூபா நாட்டு முன்னாள் அதிபரும், கம்யூனிசபுரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்றுமரணமடைந்தார். அவரது மரைவுக்கு உலகதலைஅவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது மரணத்தை அந்நாட்டுகுடிமக்களில் ஒரு பிரிவினர் வீதிகளில் உற்சாகமாககொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பிடல் காஸ்ட்ரோஇன்று அதிகாலை நேரத்தில்  மரணத்தை தழுவியுள்ளதாக அந்நாட்டு அரசுஅதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. பிடல் காஸ்ட்ரோவின் மரணம் உலக நாடுகள் பலவற்றை அதிர்ச்சிக்குள்ளாக்கியநிலையில், கியூபாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறிய கியூபாகுடிமக்கள் அவருடைய மரணச்செய்தியை கேட்டு மகிழ்ச்சியாக கொண்டாடிவருகின்றனர். பிடல் காஸ்ட்ரோ மரண செய்தி வெளியானதை தொடர்ந்து அதிகாலை நேரத்தில்அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் பொதுமக்கள் பெரும் திரளாக திரண்டுள்ளனர். சலைகளில் கூடிய பொதுமக்கள் மது…

Read More

பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்: டிஜிட்டல் கரன்சியை வெளியிடத் திட்டம்

பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்: டிஜிட்டல் கரன்சியை வெளியிடத் திட்டம்

பணப்புழக்கமே இல்லாமல், டிஜிட்டல் முறையிலேயே அனைத்து பணப் பரிவர்தனைகளையும் செய்யும் வகையில், டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு ஸ்வீடன் சாதனை படைக்கவுள்ளது. தற்போது, ஸ்வீடன் நாட்டில் 80 சதவீத பணப் பரிவர்தனை இணையத்தளம் மூலமாகவும், செல்போன் app கள் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன. ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் பண அட்டைகள் மூலமாக பணத்தை செலுத்தும் முறையினால், 2009 ஆம் ஆண்டு முதல் பண நோட்டு மற்றும் நாணயங்களின் உற்பத்தி 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தி, 2019 ஆம் ஆண்டு டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு, முற்றிலும் பண தாள்களே இல்லாத நாடாக ஸ்வீடனை மாற்ற திட்டம் இருப்பதாக அந்நாட்டு தேசிய வங்கியின் துணை…

Read More

டொனால்டு டிரம்ப் அறிவிப்பு | பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்கள்

டொனால்டு டிரம்ப் அறிவிப்பு | பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்கள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதி அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் பதவி ஏற்கும் முதல் நாளில் செய்யப்போவது என்ன என்பது குறித்த முன்னுரிமை திட்டங்களை வீடியோ செய்தி ஒன்றில் அறிவித்துள்ளார். அதில் அவர், பதவி ஏற்கும் முதல் நாளில் ‘டி.பி.பி.’ என்று அழைக்கப்படுகிற பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை, விலக்கிக்கொள்ளப்போவதுதான் முதல் வேலை என குறிப்பிட்டுள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம், கடந்த ஆண்டு அமெரிக்கா, ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட 12 நாடுகளிடையே ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இன்னும் அந்தந்த நாடுகள்…

Read More

தோல்வியால் துவண்டுவிட்டேன் ஹிலாரி கிளிண்டன் உருக்கமான பேச்சு

தோல்வியால் துவண்டுவிட்டேன் ஹிலாரி கிளிண்டன் உருக்கமான பேச்சு

தோல்வியால் துவண்டுவிட்டேன் ஹிலாரி கிளிண்டன் உருக்கமான பேச்சு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலாரி கிளிண்டன் உருக்கமாக பேசியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத நிலையில் தோல்வியை சந்தித்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் முடிவு தொடர்பாக ஒரே ஒரு கருத்தை மட்டும் அவர் தெரிவித்து இருந்தார். ஈ-மெயில் விவகாரத்தில் அமெரிக்க புலனாய்வுதுறை தலைவர் எடுத்த முடிவு தான் எனது தோல்விக்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார். ஒரு வாரமாக வெளிநிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்த ஹிலாரி கிளிண்டன் இன்று வாஷிங்டன் குழந்தைகள் பாதுகாப்பு இல்ல…

Read More

ட்ரம்ப் இன் வெற்றியும், அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வியும்

ட்ரம்ப் இன் வெற்றியும், அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வியும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டோனால்ட் ட்ரம்ப் இன் வெற்றி, அமெரிக்க ஜனநாயகத்தின் இறுதி நெருக்கடியை ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னால் அம்பலப்படுத்தி உள்ள ஓர் அரசியல் பூகம்பமாகும். அம்மண்ணின் மிக உயர்ந்த பதவியில் ஒரு ஏமாற்றுத்தனமான பாசாங்குக்காரரை மற்றும் பில்லியனிய வனப்புரையாளரை மேலுயர்த்தி உள்ள முதலாளித்துவ ஆட்சியின் சீரழிவு இந்தளவிற்கு வந்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் அவர் என்னவெல்லாம் நயமான பேச்சுக்களை வெளியிட்டாலும் சரி, ஜனாதிபதி ட்ரம்ப் ஆக அவர் வர்க்க போர், தேசிய பேரினவாதம், இராணுவவாதம் மற்றும் பொலிஸ் அரசு வன்முறையின் ஓர் அரசுக்கு தலைமை ஏற்றிருப்பார். நிர்வாகத்துறைக்கு கூடுதலாக, காங்கிரஸ் இன் இரண்டு சபைகள் மற்றும் உச்ச நீதிமன்றம் உட்பட ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள…

Read More

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி – 36

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி – 36

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் சென்ற வாரம் சூடுபிடித்த போது,யார் பதவிக்கு வருவார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்திருந்தது. தாய் மண்ணில் இருக்கும்போது, ஈழத்தமிழர்களில் அனேகமானவர்கள் எப்படி இலங்கை அரசியலைவிட இந்திய அரசியலில் அக்கறை காட்டினார்களோ அதே போன்ற நிலைமை கனடாவிலும் உருவாகியிருந்ததைச் சென்ற வாரம் அவதானிக்க முடிந்தது. சிக்காகோவில் நாங்கள் நின்ற போது பலர் றம்ப் டவரைப் பார்ப்பதற்காக வரிசையில் காத்திருந்த போதே ஒரளவு அரசியல் காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. தேர்தலில் டொனால்ட் றம்ப் அவர்கள் போட்டியிடுவதால் றம்ப் டவரைப் பார்ப்பதற்காக நிறையச் சுற்றுலாப் பயணிகள் வந்து போவதாக நாங்கள் பயணித்த படகின் படகோட்டியும் உறுதி செயதிருந்தார்….

Read More

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அபுதாபியில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி அபுதாபி : அபுதாபி அரோரா ஈவெண்ட்ஸ் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு  நிகழ்ச்சி ஆரோக்கியமென்ற செல்வம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்த்தி ஷிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல முக்கிய,அறிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்பு காணொளி காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து சுகாதாரமான வாழ்வுக்கு யோகாவின் முக்கியத்துவத்துவத்தை விளக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர்…

Read More
1 40 41 42 43