இந்தியப் பிரதமர் மோடியின் ஆங்கிலத்தை கேலி செய்த ட்ரம்ப்

இந்தியப் பிரதமர் மோடியின்  ஆங்கிலத்தை கேலி செய்த ட்ரம்ப்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசும் ஆங்கிலத்தை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிமிக்ரி மூலம் கேலி செய்ததாக அந்நாட்டின் முன்னணி நாளிதழான வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் மோடி கூறிய வார்த்தைகளை இந்தியா ஆங்கிலம் பேசும் முறையில் டிரம்ப் பேசியுள்ளார். ஒருநாட்டு பிரதமரின் பேச்சை கேலி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய ஆங்கில உச்சரிப்பை டிரம்ப் கேலி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Read More

சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்

சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்

சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை துருப்புக்கள் வடக்கு சிரியாவிற்குள் நுழைந்தன. குர்திஷ் ராணுவ குழுவை தீவிரவாதிகள் என துருக்கி கூறுகிறது. ஒய்ஜிபி என்று அறியப்படும் குர்திஷ் குழு, துருக்கியின் தென் எல்லையில் இருக்கும் அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கி வருகின்றது. தனது பகுதியில் இருந்து துருக்கி படைகளை விரட்டியதாகக் கூறும் குர்திஷ் குழு, இதற்குப் பதிலடியாக துருக்கி எல்லை பகுதியில் ராக்கெட் ஏவியதாகவும் கூறியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில், குர்திஷ் ராணுவ குழு முக்கிய பகுதியாக உள்ளது. மிக விரைவாக ஒய்ஜிபியை நசுக்கத் துருக்கி அதிபர் ரெசெப்…

Read More

இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

இந்தியாவில் 2018-ல் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும்: உலக வங்கி தகவல்

வலுவான அரசாக இருந்து கொண்டு விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அதிக அளவு வளர்ச்சி ஆற்றல் உள்ளதாக தெரிவித்துள்ள உலக வங்கி வரும் 2017-2018 நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி( ஜி.எஸ்.டி) போன்றவற்றால் துவக்கத்தில் பின்னடைவை இந்தியா எதிர்கொண்ட போதிலும், 2017-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும் சர்வதேச பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக வங்கியின் மேம்பாட்டு இயக்குனர் அஹான் கோஸ்…

Read More

பாதுகாப்பு, உளவு துறையில் ஒத்துழைப்பு நிறுத்தம்: அமெரிக்காவிற்கு பாக்., பதிலடி

பாதுகாப்பு, உளவு துறையில் ஒத்துழைப்பு நிறுத்தம்: அமெரிக்காவிற்கு பாக்., பதிலடி

நிதியுதவியை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கு உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு தருவதை பாகிஸ்தான் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தங்களை ஏமாற்றி வருவதாக அதிபர் டிரம்ப் கூறியதை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் குரம் தஸ்தகிர் கான் கூறியதாக அந்நாட்டு மீடியாவில் வெளியான செய்தி: ஆப்கனில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு உதவி, புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தானை குறைகூறும் அமெரிக்காவுடன், கண்டிப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் அமெரிக்காவிற்கு வழங்கி வந்த மிகப்பெரிய ஒத்துழைப்பை நாங்கள்…

Read More

டமாஸ்கஸ் ராணுவ முகாம்களை தாக்கிய இஸ்ரேல்: சிரியா குற்றச்சாட்டு

டமாஸ்கஸ் ராணுவ  முகாம்களை தாக்கிய இஸ்ரேல்: சிரியா குற்றச்சாட்டு

இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் டமாஸ்கஸ் ராணுவ முகாம்களில் தாக்குதல் நடத்துவதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சிரியா ராணுவம் தரப்பில், “இஸ்ரேல் நாட்டு ஏவுகணைகள் சிரியாவின் டமாஸ்கஸ் புறப்பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாம்களை தாக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. அதிகாலை 2.40 மணியளவில் லெபனான்னிலிருந்து ஏவுகணை வீசப்பட்டன. அதனைத் தொடர்ந்து இஸ்ரேலின் வடபகுதியிலிருந்து ஏவுகணைகள் பல வீசப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதல் பொருட் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சிரியா கூறியுள்ளது. ஆனால் சிரியாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க இஸ்ரேல் ராணுவம் மறுத்துவிட்டது. சிரியாவில் உள் நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது லெபனான் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் பல வான் வழித் தாக்குதலை சிரியாவில் நடத்தியது…

Read More

எச்1பி விசா சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை -அமெரிக்கா

எச்1பி விசா சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை -அமெரிக்கா

எச்1பி விசா வைத்துள்ளவர்களை உடனடியாக வெளியேற்றும் தொடர்பான சட்ட திருத்தத்தை பரிசீலனை செய்யவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்த ‘எச்-1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். இந்த ‘எச்-1 பி’ விசாக்களை வழங்குவதில் சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வரும் என கூறப்பட்டது. எச்-1 பி விசா விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணிபுரியலாம். அவர்கள் பணி சிறப்பாக இருந்தால் மேலும் 3 ஆண்டு காலம் எச்-1 பி…

Read More

கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை

கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை

சீனாவில் தயாரிக்கப்பட்டு கனடாவில் விற்பனையான உலக உருண்டையில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லை கனடாவில் வசித்து வரும் இந்தியாவை சேர்ந்த சந்தீப் தேஷ்வால் என்பவர் டொராண்டோவில் உள்ள ஒரு கடைக்கு சென்று தனது 6 வயது மகள் அஸ்மிதாவுக்கு ஒரு குளோப் உலக உருண்டை ஒன்ரை வாங்ஜினார். அது சீனாவால் தயாரிக்கப்பட்டது. வீட்டுக்கு வந்த அவர் உலக உருண்டையை பார்த்து கொண்டு இருந்தார். அதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் இருந்து தனித்து என்று காட்டப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் அந்த கடை உரிமையாளரிடம் கேட்டு உள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதியின் தவறான சித்திரம் அவரது மகள் போன்ற இந்திய இனத்தைச்…

Read More

கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

கிம்மின் பொத்தானைவிட என் அணு ஆயுத பொத்தான் `பெரியது` `சக்தி வாய்ந்தது`: டிரம்ப்

தன்னுடைய அணு ஆயுத பொத்தான் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் -னிடம் உள்ள பொத்தானைவிட `பெரியது` மற்றும் `அதிக சக்திவாய்ந்தது` என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump Donald J. Trump ✔ @realDonaldTrump North Korean Leader Kim Jong Un just stated that the “Nuclear Button is on his desk at all times.” Will someone from his depleted and food starved regime please inform him that I too have a Nuclear Button,…

Read More

ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு

ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா., சபையில் இன்று பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஓட்டளித்தன. ஜெருசலேம் நகரை, மத்திய கிழக்கு நாடுகளான, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை தொடரும் நிலையில், ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராகவும், ஐ.நா.வுக்கு ஆதரவாக இந்தியா…

Read More

ஜெருசலேம் அறிவிப்பால் அமைதி ஏற்பட வாய்ப்பு

ஜெருசலேம் அறிவிப்பால் அமைதி ஏற்பட வாய்ப்பு

ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதனால் அமைதி உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் ஜெருசலேம் நகர் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பாலஸ்தீனிய பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் பல்வேறு போராட்டங்களும் தொடர்ச்சியாக நடந்தன. இந்நிலையில், டிரம்பின் அறிவிப்பு பற்றி பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ, இதனால் அமைதி கெடாது. இது அமைதி உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் உண்மையை அங்கீகரிப்பது என்பது அமைதியின் பொருள். அதுவே அமைதியின் அடிப்படையாகும் என கூறினார். தொடர்ந்து அவர், அமெரிக்க நிர்வாகம் ஒரு புதிய அமைதிக்கான ஒப்புதலை…

Read More
1 36 37 38 39 40 43