விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு

விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன-இலங்கை அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு அந்நாட்டு அரசு விதித்த தடை நீட்டிப்பு, சரியான காரணங்களை கவனத்தில் கொண்டு வழங்கப்படவில்லை என்று லண்டனில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேல்முறையீட்டு ஆணையம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், இந்த தீர்ப்பு அடிப்படையில் பிரிட்டன் அரசும் மனுதாரரான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பின் பிரதிநிதிகள், சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் தரப்பில் எழுத்துப்பூர்வ மனுக்கள் 28 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளிக்கும். இந்த விவகாரத்தில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது…

Read More

சீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்

சீனாவுக்கு எதிராக ராணுவ பயிற்சிக்காக கைகோர்த்த 4 நாடுகள்

ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்குப் பிறகு க்வாட் நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளன. இந்த பயிற்சி அடுத்த மாதத்தில், அதாவது நவம்பரில், வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலில் மேற்கொள்ளப்படும். இதற்கு அதிகாரப்பூர்வமாக ‘மலபார் பயிற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவிலும் எதிர்வினைகள் எழுகின்றன. ஆஸ்திரேலியா, 2007 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டு ராணுவ பயிற்சியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டது. ஆனால் இப்போது அந்நாடு மீண்டும் ராணுவ பயிற்சியில் இணைவது, குவாட் நாடுகளின் அமைப்பு மேலும் வலுவடையும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் கூட்டம்,…

Read More

உடைக்கறதா பாக்கிஸ்தான் ? பாக்., ராணுவம் – சிந்து மாகாண போலீசார் மோதல்

உடைக்கறதா பாக்கிஸ்தான் ? பாக்., ராணுவம் – சிந்து மாகாண போலீசார் மோதல்

பாகிஸ்தானின் சிந்து மாகாண போலீஸ் உயரதிகாரியை ராணுவ வீரர்கள் கடத்தி சென்று அவமதித்துவிட்டதாக கூறி, போலீசார், ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கராச்சியில், ராணுவம் – போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்துள்ள கட்சிகள், ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படும் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக பதவி விலக வேண்டும் என கராச்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் மூத்த தலைவர் மரியம் நவாசின் கணவர் சப்தார் அவான் கைது…

Read More

தைவானுடன் இந்தியா வர்த்தக பேச்சு துவக்கும் : சீனாவுக்கு அடி

தைவானுடன் இந்தியா வர்த்தக பேச்சு துவக்கும் : சீனாவுக்கு அடி

தைவானுடன் வர்த்தக ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இரு நாடுகளுடனும், சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவை, தைவான் அழைப்பு விடுத்து வருகிறது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி அது உலக வர்த்தக அமைப்பில் பதிவானால், சீனாவின் அதிருப்திக்கு ஆளாகும் எனக்கருதி, அதனை மத்திய அரசு ஏற்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது, தைவானுடன் வர்த்தகரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையில் அதிகளவு முதலீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தை…

Read More

உலக நாடுகளுக்கு குறைந்த விலையில் கொரோனா தடுப்பூசி: இந்திய பிரதமர் மோடி

உலக நாடுகள் அனைத்துக்கும் குறைந்த விலையில், எளிதாக கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி மற்றும் அதனை செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர், தலைமை அறிவியல் ஆலோசகர், மூத்த விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும் இந்திய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். அந்நிறுவனங்களின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும். கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். பரிசோதனைகள் குறைந்த விலையில், முறையாக, துரிதமாக வழங்க வேண்டும்….

Read More

டொனால்டு டிரம்ப் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார் !!

டொனால்டு டிரம்ப் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறார்  !!

அதிபர் டொனால்டு டிரம்ப், நன்றாக தேறிவிட்டதால், அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்’ என, வெள்ளை மாளிகை டாக்டர் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 74, அவரது மனைவி மெலானியா, 50, ஆகியோருக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது.மெலனியா, வெள்ளை மாளிகையிலேயே தன்னை தனிமைபடுத்திக் கொண்டார். மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அதிபர் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவமனையில், நான்கு நாட்கள் சிகிச்சை பெற்ற பின், சமீபத்தில், டிரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார். அன்று முதல், வெள்ளை மாளிகையிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.சமீபத்தில், ‘பாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘நான் நன்றாக இருக்கிறேன். இப்போதே பிராசார கூட்டங்களில் பங்கேற்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.இந்நிலையில், டிரம்ப் உடல்நிலை குறித்து,…

Read More

” கொரோனா பாதிப்பு கடவுள் தந்த வரம் ” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

” கொரோனா பாதிப்பு கடவுள் தந்த வரம் ” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கடந்த 1-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் டிரம்புக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததால் அடுத்த நாளே வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிரம்ப் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். தனது உடல் நலம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: எனக்கு கொரோனா…

Read More

கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்… தைரியமாக இருங்கள் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள்… தைரியமாக இருங்கள் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவ., 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என்கிற ரீதியில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன. மருத்துவமனை பால்கனிக்கு வந்த டிரம்ப், தனக்கு கொரோனா ஏற்பட்டதும் 72 மணிநேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறினார். மேலும், ‘கொரோனாவைக் கண்டு பயப்படாதீர்கள். அனைவரும் தைரியமாக இருங்கள்’ என்றார். கொரோனாவுக்கு இடையிலும் டிரம்ப் தனது பிரச்சாரத்தை கைவிடாதது எதிர்க்கட்சிகளை வியக்க வைத்துள்ளது. ‘கொரோனா காலத்தில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஆபத்து என எனக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு சேவை ஆற்றுவது என்னுடைய கடமை. அதனால் என்னுடைய வேலையை துவங்கிவிட்டேன்….

Read More

கூகுளின் ஆதிக்கத்திற்கு எதிராக களமிறங்கும் இந்தியா !!

கூகுளின் ஆதிக்கத்திற்கு எதிராக களமிறங்கும் இந்தியா !!

கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை தடுக்க இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் ஒன்றாக செயல்பட திட்டமிட்டுள்ளன. அண்மையில் பேடிஎம் ஆப்., கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் இணைக்கப்பட்டது. இந்நிலையில் பிளேஸ்டோரில் இடம் பெற்றுள்ள கட்டணம் வசூலிக்கும் ஆப்கள் 30 சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும் என்ற கூகுளின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சனியன்று நடத்திய கூட்டத்தில் கூகுளின் ஏகபோக கொள்கைக்கு எதிராக 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. பேடிஎம், இந்தியா மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்திய ஐடி நிறுவனங்களை ஒருங்கிணைந்து புதிய அமைப்பினை உருவாக்கும் திட்டத்தில் உள்ளன….

Read More

குழந்தைகளுக்கு கொரோனா; பள்ளிகள் திறப்பால் விபரீதம்

குழந்தைகளுக்கு கொரோனா; பள்ளிகள் திறப்பால் விபரீதம்

அமெரிக்காவில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால், கொரோனா வைரசால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், கொரோனா பரவலை தடுக்க, மூடப்பட்ட பெரும்பாலான பள்ளிகள், கடந்த மாத துவக்கத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. அதிகமானோர் பலியான நியூயார்க் நகரில், இன்று, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டதால், அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில், 2 சதவீதமாக இருந்த பாதிப்பு, தற்போது, 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்து உள்ளது.மிசிசிபி மாகாணத்தில் தான், அதிக அளவில் பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு, ஜூலை மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டது தான், பாதிப்பு அதிகரிக்க காரணம். பள்ளி குழந்தைகள் முக…

Read More
1 2 3 4 5 38