ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேற்றம் – தலிபான்கள் கொண்டாட்டம்
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க வீரர்களின் கடைசி அணி காபூல் விமானநிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. . இங்கிலாந்தும். அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் தங்கள் இராணுவத்தை அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றின. அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்தியில், காபூலில் அமெரிக்க படைகளின் நடவடிக்கை முடிந்ததன் அடையாளமாக, கடைசி அமெரிக்க வீரராக மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹியூ நேற்று சி-17 ரக விமானம் ஒன்றில் புறப்பட்டு உள்ளார் என தெரிவித்தது. அவர் ஆயுதங்களுடன், ராணுவ சீருடை அணிந்து வெளியேறும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. இதை தொடர்ந்து தலீபான்கள் விமான நிலையத்திற்குள் நுழைந்து பல இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் அமெரிக்காவால்…
Read More