இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் !!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 பேர் சர்வதேச நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் !!

அமெரிக்காவைச் சேர்ந்த, இந்தியஸ்போரா நிறுவனம், சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட, 11 நாடுகளிலிருந்து செயல்படும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 58 பேர் பணியாற்றுகின்றனர். இதில், இந்தியாவில் இருந்து பிற நாடுகளில் குடியேறியோர் மற்றும் அமெரிக்கா, எத்தியோப்பியா, பிரிட்டன், உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் பிறந்த இந்திய வம்சாவளியினரும் அடங்குவர். இவர்கள் தலைமையில் செயல்படும் நிறுவனங்கள் ஆண்டுக்கு, 75 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகின்றன. இந்நிறுவனங்களில், 36 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். மேலும், இந்நிறுவனங்கள், ஆண்டுக்கு, 23 சதவீத வருவாயை, பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு…

Read More

ஆப்கன் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலி

ஆப்கன் மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலி

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலியானார்கள். காபூல் நகரில் உள்ள மசூதி ஒன்றில் ஜூன் 11ம் தேதி வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடந்த போது பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் மசூதியின் இமாம் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் காபூலில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற மசூதியில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் அந்த மசூதியின் இமாம் கொல்லப்பட்டார். ஆப்கன் அரசுக்கும், தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை மேற்கொள்வதில் முக்கிய பங்காற்றிய இமாம்கள் மீது ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு உள்த்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Read More

ஈபிள் டவர் ஜூன் 25ல் மீண்டும் திறப்பு !!

ஈபிள் டவர் ஜூன் 25ல் மீண்டும் திறப்பு !!

உலகப் புகழ்பெற்ற பிரான்சின் ஈபிள் டவர் மூன்று மாதங்களுக்குப்பிறகு வரும் ஜூன் 25ம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல்படுத்தின. ஊரடங்கு காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் மார்ச் 13ல் மூடப்பட்டது. தற்போது பிரான்சில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா தளங்கள், நினைவுச் சின்னங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற ஈபிள் டவர் ஜூன் 25ம் தேதி, நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோபுரத்தின் முதல் தளம் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 11 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம். படிக்கட்டு வழியே மட்டுமே ஏற வேண்டும். ஏறவும், இறங்கவும் தனித்தனியே…

Read More

ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

அமெரிக்காவின் மெனேசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலை பிற மாகாணங்களுக்கும் பரவி தற்போது பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டன. பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சில கருப்பர்கள் ஐபோன் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ஐபோன்கள் திருடப்பட்டதை அடுத்து ஆப்பிள் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ‘திருடப்பட்ட ஐபோன்கள் இயங்காதபடி செய்யமுடியும். மேலும் ஐபோன்களைத் திருடியவர்களை இதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக காவலர்களால் பிடிக்கவும் முடியும். ஆக திருடியவர்கள் அவர்களாகவே முன்வந்து போன்களை திருப்பி அளிப்பது நல்லது’ என ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஜார்ஜ்…

Read More

பிரேத பரிசோதனையில் தகவல் – ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று

பிரேத பரிசோதனையில் தகவல் – ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை, டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் , சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினார். அப்போது, பிளாய்டை தரையில் தள்ளி, அவரின் கழுத்தில், தன் கால் முட்டியால் அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறி, பிளாய்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டும், கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்தும் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதனை அலுவலகம், ஜார்ஜ் பிளாய்டின் 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையை,…

Read More

ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு ஒரே நாளில் 2,979 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட அலைவீசக் கூடும் என ஈரான் சுகாதார அமைச்சர் சயீத் நமாகி அச்சம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 2,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மக்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் கடுமையான சூழல்களை சந்திக்க வேண்டியது வரும் என்று நாட்டு மக்களை அவர் எச்சரித்துள்ளார். ஈரானில் இதுவரை 1,54,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,21,004 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை…

Read More

பாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்

பாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்

பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்து புறப்பட்ட விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 107 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் எனவும்,வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளதாவது: விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.

Read More

கனடாவின் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : 69 ஆயிரம் பேர் பாதிப்பு

கனடாவின் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : 69 ஆயிரம் பேர் பாதிப்பு

கனடாவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,148 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 68,839 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல மாகாணங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தவும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். நோய் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று) புதிதாக 1,148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 178 பேர் பலியாகினர்….

Read More

பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை

பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை

பிரிட்டனில் தற்போது கொரோனா குறித்த ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்கள் 600 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாமென கூறப்படுகிறது. இன்னும் உறுதி செய்யப்படாத இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களில் 10 சதவீதத்தினரது தகவல்கள் இல்லை. இவர்கள் என்.ஹெச்.எஸ்-ல் சிகிச்சை பெறவில்லை என்பதால் இவர்கள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. ஆராய்ந்து பார்த்ததில் இவர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள வயோதிகர்கள் எனத் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கடந்த ஏப்.,3ம் தேதி வரை 4,100 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.217 பேர்…

Read More

5ஜி டவரை எரித்த இங்கிலாந்து மக்கள் – கொரோனா வைரஸ்

5ஜி டவரை எரித்த இங்கிலாந்து மக்கள் – கொரோனா வைரஸ்

இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இளவரசர் சார்லஸ் நோயின் பிடியில் சிக்கி குணமடைந்துள்ளார். நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சஸ் நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நோய் இங்கிலாந்து மக்களை பெரிதும் பாதித்துள்ளது. செல் போன் வளர்ச்சியின் தற்போதைய கட்டமான 5 ஜி தொழில்நுப்டத்தை பல்வேறு நிறுவவனங்கள் இங்கிலாந்தில் வழங்கி வருகின்றன. இந்நிலையில் கொகேரானா வைரசை 5 ஜி-யை இணைத்து ஒரு செய்திபரவியது. அதாவது 5 ஜி செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சு நுரையீரலில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சி விடுவதாக செய்தி பரவியது. ஏற்கனவே கொரோனா அச்சத்தில் இருந்த இங்கிலாந்து மக்கள் 5 ஜி…

Read More
1 2 3 4 5 7