இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். தமிழரான முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது. முரளிதரன் போலவே விஜய் சேதுபதி தோற்றத்தை பொருத்தமாக மாற்றி உள்ளனர். இந்தப் படம் பற்றிய தகவல் வெளியான போதே விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கக் கூடாது…

Read More

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று – அச்சத்தில்  மக்கள்

இலங்கையில் கொரோனா மூன்றாவது கொத்தணி பரவ ஆரம்பித்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கடந்த 3ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், வேயங்கொட வரை ஊரடங்கு சட்டம் விஸ்தரிக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் கம்பஹா போலீஸ் பிரிவிற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றதை அடுத்து, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இன்று…

Read More

இலங்கை தூதரகத்தில் காந்தி சிலைக்கு ராஜபக்சே மரியாதை !!

இலங்கை தூதரகத்தில் காந்தி சிலைக்கு ராஜபக்சே மரியாதை !!

இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த நாளையொட்டி உலகமெங்கும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் வந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, அங்குள்ள காந்தி மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் இலங்கை அரசு உயரதிகாரிகளும் வந்திருந்தனர்.

Read More

நரேந்திர மோதி – மஹிந்த ராஜபக்ஷ உரையாடல் : இந்தியா- இலங்கை கூட்டறிக்கை

நரேந்திர மோதி – மஹிந்த ராஜபக்ஷ உரையாடல் : இந்தியா- இலங்கை கூட்டறிக்கை

அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது அவசியம் என்று தனது உரையின்போது இந்திய பிரதமர் மோதி வலியுறுத்தினார். இந்த தகவலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுவு அமைச்சக இணைச் செயலாளர் (இந்தியப் பெருங்கடல் மண்டலம்) அமித் நரங் உறுதிப்படுத்தினார். “அரசியலமைப்பு விதிகளை அமல்படுத்தி நல்லிணக்கத்தை அடைவதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கெளரவம் ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகளை உணரும் வகையில் செயல்படுமாறு இலங்கையில் புதிய அரசாங்கத்துக்கு இந்திய பிரதமர் மோதி அழைப்பு விடுத்தார்” என்று இந்திய வெளியுறவு அதிகாரி நரங் தெரிவித்தார். மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு…

Read More

ஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்

ஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய  நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி, ஆடை தொடர்பான சர்ச்சை ஒன்று ஏற்பட்ட நிலையில், தற்போது அது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை அன்றைய தினம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நாடாளுமன்ற விதிகளை மீறி, அதாவுல்லா ஆடை அணிந்திருந்ததாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபையில் தெரிவித்திருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஏ.எல்.எம்.அதாவுல்லா அணிந்த ஆடைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார். நாடாளுமன்ற விதிகளை மீறி ஆடை அணிய அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தான் மேலாடையின்றி வருகைத் தருவதாக சபாநாயகரிடம் எஸ்.எம்.மரிக்கார் கூறியிருந்தார். ஏ.எல்.எம்.அதாவுல்லா, பாகிஸ்தான் அல்லது…

Read More

இலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்

இலங்கை தாதாவுடன் உள்ள தொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நான்கு நாட்கள்

இலங்கை கொழும்பு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர் பிரதீப்குமார் பண்டாரா, 31. போதைப் பொருட்கள் கடத்தலில் தொடர்பு இருந்ததால், இலங்கை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்த பிரதீப்குமார் பண்டாரா, கள்ளப்படகு மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு கடந்த, 5 ம் தேதி வந்தார். அப்பகுதியில் இருந்தவர்களிடம் சிங்கள மொழியில் பேசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மண்டபம் போலீசார் அளித்த தகவலின்படி, கோவை சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் பிரதீப்குமாரிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிரதீப்குமார் பண்டாரா, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது….

Read More

ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு முக்கியமா இல்லையா ?

ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு முக்கியமா இல்லையா ?

ஈழத் தமிழருக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு இருந்தால் நன்மையா அல்லது தமிழ் நாட்டில் எந்தவொரு அதிகரமுமில்லாத, ஈழத் தேசியம் பேசும் ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் போதுமா ? இந்தியா என்பது, 28 மாநிலங்களும் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களும் சேர்ந்த, 543 லோக்சபா பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 250 ராஜசபா(upper house) பாராளுமன்ற உறுப்பினர்களையும் மற்றும் 140 கோடி மக்கள் தொகையையும் கொண்ட ஜனநாயக நாடு ! இதில், 39 லோக்சபா உறுப்பினர்களையும் மற்றும் 18 ராஜசபா உறுப்பினர்களையும் மற்றும் 8 கோடி மக்கள் தொகையில் 6.5 கோடி தமிழர்களை கொண்டது தான் தமிழ்நாடு ! இந்தியாவின் தேசிய இறையாண்மையை பாதிக்கும் விடையமாக,…

Read More

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை செய்யப்படும் – இலங்கை அரசு

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை செய்யப்படும் – இலங்கை அரசு

இலங்கையில் மாடுகளை வெட்ட தடை கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இலங்கை பார்லி., வளாகத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டதில் பேசிய பிரதமர் ராஜபக்ஷே நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சட்டம் கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது என தெரிவித்து உள்ளார் . விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவைடைந்த பின்னர் மேற்கண்ட தடை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக வெளிநாடுகளில் இருந்து இறைச்சிகளை இறக்குமதி செய்யவும்முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Read More

இலங்கை நாடானது தமிழர் பூமி…இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் – சி.வி. விக்னேஷ்வரன்

இலங்கை நாடானது தமிழர் பூமி…இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள் – சி.வி. விக்னேஷ்வரன்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன், நாடாளுமன்றத்தில் முதல் நாள் அமர்வில் வெளியிட்ட கருத்து இன்று மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சி.வி. விக்னேஷ்வரனின் கருத்து நேற்றைய தினம் (20) அமைந்திருந்தது. “இலங்கை நாடானது தமிழர் பூமி” எனவும், “இந்த மண்ணின் பூர்வீக குடிகள் தமிழர்கள்” எனவும், “தமிழ் மொழி இந்த நாட்டின் பிரதான மொழி” எனவும் விக்னேஷ்வரன் நேற்றைய தினம் உரை நிகழ்த்தியிருந்தார். இந்த கருத்து முற்றிலும் தவறானது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று (21) தெரிவித்துள்ளார். தமிழர்களின் சுயவுரிமைகள் பற்றி நாடாளுமன்றத்தில்…

Read More

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில் விக்ரமசிங்க !!

கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில் விக்ரமசிங்க !!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.  கொழும்பில் இன்று ஊடகங்களிடம் பேசிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் இந்த தகவலை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் பதவிக்காக, நான்கு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்படி, ரவி கருணாநாயக்க, தயா கமகே, வஜிர அபேவர்தன மற்றும் அகில விராஜ்காரியவசம் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்வரும் காலங்களில் மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பெரிய…

Read More
1 2 3 4 5 45