சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு இந்தியாவில்

சுப்ரீம் கோர்ட்: முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு இந்தியாவில்

சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்றத்துக்கு அதிகப்பட்சமாக 34 நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முழு எண்ணிக்கையிலான நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாதத்தில் அடுத்தடுத்து மூத்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமனும், நவீன் சின்காவும் ஓய்வு பெற்றதால், 26 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 24 ஆக குறைந்தது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிதாக 9 நீதிபதிகளை நியமிக்கும்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிசியம் கடந்த 17ம் தேதி ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்கு தெலுங்கானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி…

Read More

தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு கூடுதல் பொறுப்பு

கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆலுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மேலும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கான புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, ரூ.2,097 கோடி மதிப்பில் ஊரக சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும். 12,125 நூலங்கங்கள் படிப்படியாக மேம்படுத்தப்படும். ரூ.233 கோடி மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், கிராம ஊராட்சி கட்டங்கள் கட்டி முடிக்கப்படும். சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும். பெண் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அதிகரித்து வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு…

Read More

தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதமும் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் கே.என்.நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி தாம்பரத்தை மாநகராட்சியாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். இந்த பகுதிகளை சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும். காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை…

Read More

ஆப்கானிஸ்தான் விவகாரம்; 26ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு

ஆப்கானிஸ்தான் விவகாரம்; 26ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது. அதன்படி, கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா மற்றும் விமானப்படை விமானங்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை தாயகம் அழைந்து வந்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு…

Read More

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 62-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்த ஆத்மநிர்பர் பாரத் கனவை நிறைவேற்றும் நோக்கில் அவர் முன்னோடியாக உள்ளார். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- மிக்க…

Read More

கொடநாடு விவகாரம்; சட்டமன்ற வளாகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தர்ணா

கொடநாடு விவகாரம்; சட்டமன்ற வளாகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தர்ணா

கோடநாடு கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பிறகு, சட்டப்பேரவைக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ பன்னீர் செல்வம் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர்செல்வம், “எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு தராத போக்கு நிலவுகிறது. பொய்யான வழக்குகளை கொண்டு வந்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளை திமுக மேற்கொள்கிறது. எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம். திமுக அரசின் செயல்களை கண்டிக்கும் வகையில் பேரவையில் இருந்து வெளிநடப்பு…

Read More

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது ஏன்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலாது ஏன்? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்படையதே, ஆனால் மத்திய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை. 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தந்திரத்தால் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால் தான் பெட்ரோல் & டீசலின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70.195 கோடிக்கும்…

Read More

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்கப்படும்: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி ரூ.3 அளவுக்கு குறைக்க முதல் அமைச்சர் ஆணையிட்டுள்ளார். பெட்ரோல் மீதான வரி குறைப்பால் 1,160 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். பெட்ரோல் வரிக்குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் தமிழகத்தில் நடப்பாண்டில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369,09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது….

Read More

1 ஜூலை 2022 முதல் ஒரு முறை யூஎன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – இந்தியாவின் மத்திய அரசு

1 ஜூலை 2022 முதல் ஒரு முறை யூஎன் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – இந்தியாவின் மத்திய அரசு

பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. செலவழிப்பு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை 1 ஜூலை 2022 முதல் தடை செய்யப்படும். பிளாஸ்டிக் பைகளின் தடிமன் 75 மைக்ரானுக்கு மிகாமல் இருக்க வேண்டும், இது செப்டம்பர் 30 முதல் கட்டாயமாகும். பிளாஸ்டிக் பைகளின் தடிமன் அளவு 120 மைக்ரானாக அதிகரிக்கப்படுகிறது. செலவழிப்பு பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை ஏற்கனவே தமிழகத்தில் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More
1 2 3 4 5 133