மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்-மந்திரி பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்.எல்.ஏ.வும்,வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி…

Read More

ஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இலக்கை தாக்கி அழித்தது

ஒடிசாவில் ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி; இலக்கை தாக்கி அழித்தது

ஆகாஷ் ப்ரைம் என்ற ஏவுகணையை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) வடிவமைத்துள்ளது.  ஒடிசாவின் சந்திப்பூரில் இந்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஆளில்லா விமானங்களை தரையிலிருந்து இலக்காக கொண்டு, தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து, தாக்கி அழித்துள்ளது.  இதனால், டி.ஆர்.டி.ஓ. அமைப்பிற்கு மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Read More

இந்து மடாதிபதி மரணம்: குற்றவாளிகள் தப்ப முடியாது; முதல்-மந்திரி பேட்டி

இந்து மடாதிபதி மரணம்: குற்றவாளிகள் தப்ப முடியாது; முதல்-மந்திரி பேட்டி

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகாரா பரிஷித் மடத்தின் தலைவர் மகந்த் நரேந்திர கிரி தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றிய காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரது இல்லத்தில் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  இந்நிலையில், நரேந்திர கிரியின் உடலுக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி…

Read More

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டினை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். இந்த தொலைபேசி உரையாடலின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Read More

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து – நிர்மலா சீதாராமன்

நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017- ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.  ஜி.எஸ்.டி. நடைமுறை அமலுக்கு வந்தது முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதிமந்திரி தலைமையில் நடைபெற்று வருகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: -பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து…

Read More

தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு – தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி இழப்பு – தணிக்கை துறை அறிக்கையில் தகவல்

2018-19 ஆம் ஆண்டுக்கான வருவாய் மற்றும் பொருளாதாரப் பிரிவிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 2018-19 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் 1 லட்சத்து 72 ஆயிரத்து 741 கோடி ரூபாயாக இருந்தது என்றும் அதில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 549 கோடி ரூபாய் வரி மூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைத்த மொத்த வருவாயில் தமிழக அரசால் ஈட்டப்பட்ட வருவாய் 69 சதவீதமாக இருந்தது என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி., வணிக வரி, பதிவுக் கட்டணம் உள்ளிட்டவைகள் மீதான வரிகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டதில் தமிழக அரசுக்கு ரூ.1,950 கோடி…

Read More

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் ஆக.13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த ஆக.23-ஆம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. விவாதங்களுக்கு துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனா். காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று காலை மீண்டும் கூடியது. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நீட் தோவை ரத்து செய்யும் சட்டத் திருத்த மசோதா, உள்பட 20 முக்கிய சட்டத்திருத்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. 23 நாள்கள் நடைபெற்ற தமிழக…

Read More

சட்டசபையில் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்

சட்டசபையில் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம் தொடர்பாக காரசார விவாதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி இடையே சட்டசபையில்  காரசார விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் , ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாக, தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் குறிப்பிட்டார். இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது அவையின் மரபு அல்ல என்றும், அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கை விரைந்து முடிக்கத் தான்…

Read More

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி..!!

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி..!!

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டு  சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது.. சொத்துக்களை முடக்கியுள்ள அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. அதேபோல், 2020-ஆம் ஆண்டு, கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தது…

Read More

முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. நலக்குறைவால் கடந்த 22ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் விஜயலட்சுமி  உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்த சசிகலா விஜயலட்சுமி  உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார்.  ஓ. பன்னீர்செல்வத்தை நேரில்…

Read More
1 2 3 4 133