6 லட்சம் கிராமங்கள் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

6 லட்சம் கிராமங்கள் இணைப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

பெங்களூரு,-”நாட்டில் ஆறு லட்சம் கிராமங்களை ‘பிராட்பேண்ட்’ எனப்படும் அகன்ற அலைவரிசை வாயிலாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ மின்னணு உற்பத்தி, ‘செமிகண்டக்டர்’ எனப்படும், ‘சிப்’களின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ‘செமிகான் இந்தியா’ மாநாட்டை நடத்த, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இந்நிலையில், கர்நாடக தலைநகர் பெங்களூரில், செமிகான் இந்தியா முதல் மாநாடு நேற்று துவங்கியது. இதை ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டில், ௧௩௦ கோடிக்கும் அதிகமான இந்தியர்களை…

Read More

ஜனாதிபதி அல்ல… பிரதமர் ஆவதே விருப்பம்: மாயாவதி

ஜனாதிபதி அல்ல… பிரதமர் ஆவதே விருப்பம்: மாயாவதி

லக்னோ: மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சி., மிஸ்ரா உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். இதனால் மாயாவதி ஜனாதிபதி ஆக உள்ளார் என சமாஜ்வாதி கட்சியினர் கூறினர். அவர்கள் புரளி கிளப்புவதாகவும், தான் பிரதமராக விரும்புவதாகவும் மாயாவதி கூறினார். உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு பா.ஜ.க., மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சி., மிஸ்ரா மற்றும் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ., உமா சங்கர் சிங் ஆகியோர் இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தனர். மாயாவதி ஒப்புதலுடன் இச்சந்திப்பு நடைபெற்றது. பகுஜன் சமாஜ்…

Read More

உக்ரைன் உடனான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி

உக்ரைன் உடனான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன. இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் தூதர்கள், வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்தியாவுக்கு…

Read More

விண்ணுக்கு ராக்கெட் அனுப்பி தென் கொரியா சாதனை

விண்ணுக்கு ராக்கெட் அனுப்பி தென் கொரியா சாதனை

சியோல்-உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பி, தென் கொரியா சாதனை படைத்துள்ளது. கிழக்காசிய நாடுகளான தென் கொரியா – வட கொரியா இடையே எப்போதும் பனிப்போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த வாரம், அந்நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதனால், வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க, ஐ.நா., சபையிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில், வடகொரியாவின் ராணுவ நடவடிக்கைகள், நிலைகளை தெரிந்து கொள்ள, தென் கொரியாவிடம் ராணுவ உளவு செயற்கைக்கோள்கள் இல்லை. அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை நம்பியே உள்ளது. எனவே,…

Read More

உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?

உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?

ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி பேச்சில் ஈடுபட்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் உக்ரைன் குழுவை சேர்ந்த இருவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்று பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று, ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக் இந்த அமைதிப் பேச்சில் பங்கேற்று உக்ரைனுக்கு ஆதரவாக பேசி வந்தார். இந்நிலையில், தொழிலதிபர் ரோமன் மற்றும் உக்ரைன் அமைதி குழுவை சேர்ந்த இரண்டு பிரதிநிதிகளுக்கு கடந்த மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அமெரிக்காவின்,…

Read More

பாக்., பிரதமர் பதவி தப்பிக்குமா? பார்லி.,யில் இன்று ஓட்டெடுப்பு!

பாக்., பிரதமர் பதவி தப்பிக்குமா? பார்லி.,யில் இன்று ஓட்டெடுப்பு!

எதிர்க்கட்சிகளுடன், கூட்டணிக் கட்சியினர் மற்றும் சொந்தக் கட்சியினரும் போர்க் கொடி துாக்கியுள்ளதால், இன்று நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், பதவியை தக்க வைப்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பிரதமராக உள்ளார். கடந்த 2018ல் நடந்த தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால், அவர் பிரதமரானார். இந்நிலையில், கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் தள்ளாடுகிறது. இந்த நிதி நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடுகளே காரணம் என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன….

Read More

எதிர்ப்போரை நசுக்கும் ரஷ்ய அதிபர் புடின்

எதிர்ப்போரை நசுக்கும் ரஷ்ய அதிபர் புடின்

நியூயார்க்,:உக்ரைன் போரை விமர்சிக்கும் மக்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரும்புக் கரத்துடன் நசுக்கி வருவதாக அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது. கடந்த, 2011 முதல் புடினை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை, இரு ஆண்டுகளுக்கு முன் விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்தது. அதில் பிழைத்த நவால்னிக்கு நேற்று முன்தினம் மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கில் நவால்னி இரண்டரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். புதிய தண்டனை வாயிலாக நவால்னியை சிறையிலேயே வைத்திருக்க புடின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்போரையும் புடின்…

Read More

உலகம் செய்தி ‘இஸ்லாம் பயம்’ அதிகரிப்பு: இம்ரான் கான் ஒப்புதல்

உலகம் செய்தி  ‘இஸ்லாம் பயம்’ அதிகரிப்பு: இம்ரான் கான் ஒப்புதல்

”நியூயார்க் இரட்டை கோபுர கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின், உலகளவில் இஸ்லாத்தின் மீதான பயம் அதிகரித்து விட்டது,” என இம்ரான் கான் தெரிவித்தார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நடக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதாவது: இஸ்லாத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை. கிரிக்கெட் வீரனாக இருந்த போது, நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். அப்போது, அந்த நாடுகளில் இஸ்லாத்தின் மீது வெறுப்போ, பயமோ மற்ற மதத்தினரிடம் இருந்தது இல்லை. ஆனால், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001 செப்., 11ல், இரட்டை கோபுரத்தின் மீது நடந்த…

Read More

உக்ரைனை நேடோவில் இணைக்க அழுத்தம் கொடுக்க மாட்டோம்: ஜெலன்ஸ்கி

உக்ரைனை நேடோவில் இணைக்க அழுத்தம் கொடுக்க மாட்டோம்: ஜெலன்ஸ்கி

நேடோ அமைப்பில், உக்ரைனை சேர்த்து கொள்ள வேண்டும் என இனியும் அழுத்தம் கொடுக்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: நேடோ அமைப்பில் சேர்த்து கொள்ள வேண்டும் என இனியும் வலியுறுத்த மாட்டோம். அவர்களிடம் தானம் பெறும் நாட்டின் தலைவராக இருக்க விரும்பவில்லை. நேடோ அமைப்பு,உக்ரைனை உறுப்பினராக சேர்த்து கொள்ள விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Read More

இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி மீனவர் பிரச்னையை எழுப்ப திட்டம்

இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி மீனவர் பிரச்னையை எழுப்ப திட்டம்

நம் அண்டை நாடான இலங்கைக்கு, இம்மாத இறுதியில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந் நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்திக்க உள்ளார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றை எழுப்ப திட்டமிட்டுள்ளார்.இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நீண்டகாலமாக நல்ல நட்புறவு உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை சீனாவுடன் நெருங்கி பழகி வருகிறது. இந்நிலையில், இலங்கையின் அன்னியச் செலாவணி கையிருப்பு கடுமையாக சரிந்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதிலிருந்து விடுபட, இலங்கை அரசு, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை கோரியுள்ளது.இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இம்மாத இறுதியில்…

Read More
1 2 3 139