மியாமி நகரில் 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில் 24 பேர் பலி !!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் ஜூன் 24 அன்று 12 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில், 24 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கி, காணமல் போன 121 பேர் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

1980இல் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள கார் நிறுத்தகத்தின் சுவர்களில் நீர் கசிவு ஏற்பட்டு பலவீனமானதாலும், ஆ.சி.சி கான்க்ரீட் தளங்களில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து, பலமிலந்ததாலும், இந்த கட்டிடம் இடிந்து நெறுங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காணாமல் போன 121 பேரை கண்டுபிடிக்கும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டு, பாதி இடிந்த நிலையில் உள்ள இந்த அடுக்கு மாடி கட்டடம் வெடி வைத்து தகர்க்க திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம்(ஞாயிறு) அன்று இரவு 10.30 மணிக்கு, வெடி வைக்கப்பட்டு இந்த கட்டிடம் தகர்க்கப்பட்டது.

மியாமி நகரை எல்சா புயல் தாக்க உள்ளதால், அதற்கு முன்பாக இதை தரைமட்டமாக்க முடிவு செய்யப்பட்டது.வெடி வைப்பதற்கு முன்பாக, இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக, மெழுகுவர்த்தி ஏந்தி பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.