சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

திருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். தென்காசி மலையான் தெரு வைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி(50). இவர்,தன்னை நாட்டு வைத்தியர் என்று கூறி சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை குறைத்தல் போன்றவைகளுக்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுத்து வந்துள்ளார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தென்காசி அருகே அழகப்பபுரத்தில் தென் னந்தோப்பு ஒன்றில் வைத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து வந் துள்ளார். அதுபோல் நேற்றும் முத்துப் பாண்டி அங்கு சென்று சிலருக்கு சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்துள்ளார்….

Read More

3 தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க டெல்லியில் ஆணையர்களுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

3 தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க டெல்லியில் ஆணையர்களுடன் தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

அரவக்குறிச்சி,தஞ்சை,திருப்ப ரங்குன்றம் தொகுதிகளில் பண விநியோகத்தை தடுத்து,அமை தியான முறையில் தேர்தலை நடத் துவது தொடர்பாக,டெல்லியில் தேர்தல் ஆணையர்களுடன் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கடந்த மே மாதம் 16-ம் தேதி சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடந்தது. இதில்,வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் வழங்கப்பட்டதன் காரண மாகவும்,வருமான வரித்துறை சோதனையில் பணம் அதிகளவில் பிடிபட்டதாலும்,அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்த முடி யாது என்ற காரணத்தை தெரிவித்து தேர்தலை ரத்து செய்தது. தொடர்ந்து,232 தொகுதிகளுக் கும் தேர்தல் நடந்து முடிந்த து. முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,திருப்பரங்குன்றம் தொகுதியில்…

Read More

4 வாரங்களுக்குப் பிறகு ஜெயலலிதா எழுந்து உட்கார்ந்தார்: நலமாக இருப்பதாக தகவல்- முதல்வருக்கு வழங்கப்படும் மருந்து அளவில் மாற்றம்

4 வாரங்களுக்குப் பிறகு ஜெயலலிதா எழுந்து உட்கார்ந்தார்: நலமாக இருப்பதாக தகவல்- முதல்வருக்கு வழங்கப்படும் மருந்து அளவில் மாற்றம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் மருந்து அளவில் மாற்றம் செய்ததால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கு வாரங்களாக படுக்கையில் இருந்த முதல்வர்,எழுந்து உட்கார்ந்து முழு நினைவோடு இருப்பதுடன்,சைகை மூலமாகவும் பேசி வருகிறார். இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லண்டன் சிறப்பு மருத்துவர் ஜான் ரிச்சர்டு பீலே மற்றும் எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் கில்நானி,அஞ்சன் டிரிக்கா,நிதீஷ் நாயக் ஆகியோரும் முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வருக்கு அப்போலோ மருத்துவ நிபுணர்கள் குழு அளித்து வரும் சிகிச்சையை தொடர்வதற்கு அவர்கள் அனுமதித்தனர். தற்போது சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு பெண் மருத்துவர் கள் அப்போலோ மருத்துவமனை பிசியோதெரபி நிபுணர்களுடன்…

Read More

முதல்வர் உடல்நிலையை விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு 2-வது முறையாக ஆளுநர் வருகை

முதல்வர் உடல்நிலையை விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு 2-வது முறையாக ஆளுநர் வருகை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று (சனிக்கிழமை) அப்போலோ மருத்துவமனை வந்தார். முன்னதாக அவர் அக்டோபர் 1-ம் தேதி மருத்துவமனைக்கு வந்து முதல்வர் நலனை விசாரித்துச் சென்றார். தற்போது 2-வது முறையாக அவர் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அரை மணி நேரம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபடி மருத்துவர்களிடம் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா,கடந்த செப்டம்பர் 22-ம் தேதியன்று சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை…

Read More

‘நெருப்புடா’ பாடலுடன் அறிமுகமாகும் வடிவேலு

‘நெருப்புடா’ பாடலுடன் அறிமுகமாகும் வடிவேலு

‘கத்தி சண்டை’ படத்தில் ‘நெருப்புடா’ பாடல் பின்னணியில் வடிவேலு அறிமுகமாவது போன்று காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சுராஜ். விஷால்,தமன்னா,வடிவேலு,சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கத்தி சண்டை’. சுராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைத்திருக்கிறார். நந்தகோபால் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று,இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நவம்பர் 18ம் தேதி இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது. நாயகனாக மட்டுமே நடித்து வந்த வடிவேலு,இப்படத்தின் மூலம் மீண்டும் காமெடியன் வேடத்துக்கு திரும்பியிருக்கிறார். சுராஜ் – வடிவேலு கூட்டணி படங்களான ‘மருதமலை’ மற்றும் ‘தலைநகரம்’ காமெடிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவை….

Read More

சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி

சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் சிறப்பு ஓவியக் கண்காட்சி

தந்தை சிவகுமாரின் 75வது பிறந்த நாளை,சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். 1965ம் ஆண்டு ‘காக்கும் கரங்கள்’ மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சிவகுமார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தார். வரும் அக்டோபர் 27ம் தேதி தனது 75வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் சிவகுமார். இதனை சிவகுமாருடைய மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் ‘மார்க்கண்டேயனுக்கு வைரவிழா’ என்ற தலைப்பில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள். சிவகுமார் வரைந்துள்ள பல்வேறு ஓவியங்களில் இருந்து 140 ஒவியங்களைத் தேர்ந்தெடுத்து லலித் கலா அகாடமியில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. இக்கண்காட்சி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற…

Read More

பதினைந்து ஆண்டு கால நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு – கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய சிந்தனைகள்

பதினைந்து ஆண்டு கால நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  – கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய சிந்தனைகள்

– கலாநிதி நல்லையா குமரகுருபரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி ஒக்டோபர் 21ம் திகதியுடன் ஒன்றரை தசாப்தங்கள் நிறைவு பெறுகின்றது. கடந்த 15 ஆண்டகளில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தம் அரசியல் தலைமையாக தமிழ் மக்களால் பல்வேறு தேர்தல்கள் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. காலத்திற்குகாலம் ஒரு தசாப்தம் கூடியது ஒன்றரை தசாப்த காலங்கள் ஊடாக தமிழ் தலைமை புது வடிவம் எடுத்து வரவேண்டிய தேவை ஏற்படுவதும் புதிய தலைமைத்துவம் கொடுக்கப்படுவதும் இயல்பான வரலாற்று நிகழ்வாகும். இந்த வரிசையிலே கடந்த 15 ஆண்டுகள் தமிழினத்தின் வரலாற்றில் ஒரு…

Read More

அமரர். வைரமுத்து முருகமூர்த்தி

அமரர். வைரமுத்து  முருகமூர்த்தி

இறப்பு : 21 அக்டோபர் 2014 ஆண்டுகள் இரண்டு மறைந்தாலும் ஆறவில்லை எம் துயரம் அழுத கண்ணீரும் காயவில்லை தன் ஈரம் ஆறாத்துயரில் எமை ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலில் எங்கே மறைந்தாய் எம் அன்பு தெய்வமே! காலத்துடன் போராடினோம் உம்மை காப்பாற்ற கடவுளிடம் மன்றாடினோம் உயிர் காக்க – ஆனால் காலனவன் கவர்ந்து கொண்டானே வெகுவிரைவாய் கலகலப்பான பேச்சும் கனிவான புன்னகையும் பாசம் கொண்டு உறவாடி மகிழும் உங்கள் இனிய முகம் காணவே துடிக்கின்றோம் இராண்டு ஆனாலென்ன இராயிரம் வருடங்கள் ஓடினாலென்ன என்றும் உங்கள் பிரிவால் துயருறுகின்றோம் எங்கள் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து ஆண்டவன் அடியில் உங்கள் ஆத்மசாந்திபெற ஜெயதுர்க்கை அம்பாளை வேண்டி நிற்கின்றோம். மனைவி, பிள்ளைகள்,…

Read More

திரு. நாகப்பன் குருநாதன்

திரு. நாகப்பன் குருநாதன்

இறப்பு : 3 செப்ரெம்பர் 2016 நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் 17, குமாரசாமி வீதி கந்தர்மடம், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகப்பன் குருநாதன் அவர்கள் கடந்த 19-10-2016 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற நாகப்பன் – வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்;சென்ற அமிர்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும், பவானி, டாக்டர் இந்திராணி கலைச்சந்திரன், பவானந்தா, டாக்டர் தேவயானி விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை குமாரசாமி, சத்தியதேவி துரைசிங்கம் ஆகியோரின் சகோதரரும், டாக்டர் கலைச்சந்திரன் விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான நல்லம்மா தில்லைநாதன், முத்துக்குமாரு,…

Read More

ஜனாதிபதிப் பதவியின் சுகங்களை இப்போதுதான் நுகரத்தொடங்கியுள்ளாரா மைத்திரி?

ஜனாதிபதிப் பதவியின் சுகங்களை இப்போதுதான் நுகரத்தொடங்கியுள்ளாரா மைத்திரி?

முன்னைய ஜனாதிபதிமகிந்த ராஜபக்சாவும் அவரதுசகோதரரகளும் புதல்வர்களும் இலங்கையின் அனைத்துவளங்களையும் பலவருடங்கள் நுகர்ந்துதங்கள் இராஜபோகவாழ்க்கையைஅனுபவித்தவிதம் இலங்கைமக்களைஆட்சிமாற்றம் ஒன்றுக்கு இழுத்துச் சென்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புமற்றும் ஐக்கியதேசியக் கட்சிஆகியவற்றின் பலத்தஆதரவுடன் ஆட்சிபீடத்தையும் ஜனாதிபதிஆசனத்தையும் அலங்கரிக்கத் தொடங்கியஆரம்பநாட்களில் ஜனாதிபதிமைத்திரிதன்னைஒருஆசாபாசங்கள் அற்றஒருதலைவனாகவும் தூய்மையானஒருபௌத்தனாகவும் காட்டிக் கொள்ளமுயன்றார். முன்னைய ஜனாதிபதிமகிந்தாவைப் போன்றுதான் முழு நிதிஓதுக்கீட்டையும் தனதுசொந்தநலனுக்காகபயன்படுத்தமாட்டேன் என்று கூறிவந்தார். சிலபொதுக்கூட்டங்களில“நான் மாணவனாக இருந்தகாலத்தில் எண்ணைவிளக்கிலேயேகல்விகற்றேன் என்றும் செருப்புஅணிந்தகால்களுடனேயேபாடசாலைககுச் சென்றேன் என்றெல்லாம் கூறிவந்தார். இவ்வாதுதனதுஆரம்பநாட்களில் சொல்லிவந்தமைத்திரிகடந்தவருடங்களில் தனக்கானநிதிஒதுக்கீட்டைமிகவும் குறைவாகஏற்றுக்கொண்டார். ஆனால் எதிர்வரும் புதியஆண்டான2017ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத்திட்டஒதுக்கீட்டில் ஜனாதிபதிக்கானசெலவீனம், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி, 6.45 பில்லியன் ரூபாவாககாணப்படுகின்றது. மேலும், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி,பாதுகாப்புஅமைச்சுக்காக 284 பில்லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்தவருடம் இது 22 பில்லியன் ஆகும்.)…

Read More
1 375 376 377 378 379 387