இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது!

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது!

இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது. இந்திய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திய நிலையில், தமிழகத்தை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தசூழலில் சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில்…

Read More

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி..!!

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்; வருமான வரித்துறை அதிரடி..!!

சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. 2017-ஆம் ஆண்டு  சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. அதன்படி சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது.. சொத்துக்களை முடக்கியுள்ள அதிகாரிகள், அங்கு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. அதேபோல், 2020-ஆம் ஆண்டு, கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தது…

Read More

பள்ளி, கல்லூரிகளில் முழு கண்காணிப்பு – பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் முழு கண்காணிப்பு – பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த 1 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரத்துறையினர் முழு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மாணவர்கள் குழுவாக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அவர்கள் வந்து செல்வதற்கு தனித்தனி…

Read More

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நடப்பு ஆண்டு நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை விட குறைவாக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 890 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு 155 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. நேற்று இரவு நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை…

Read More

பதிவாளர் எச்சரிக்கை …! திருமண தகவல் இணையதளம் மூலம் மோசடி: நைஜீரியர்கள் கும்பலால் கைது செய்யப்பட்டனர்

பதிவாளர் எச்சரிக்கை …! திருமண தகவல் இணையதளம் மூலம் மோசடி: நைஜீரியர்கள் கும்பலால் கைது செய்யப்பட்டனர்

திருமண மோசடி செய்து ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட புதுடெல்லியில் வசித்த ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களை தெலுங்கானா  ரசகொண்டா சைபர் கிரைம் போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் செர்ஜ் ஒலிவியர் (33), ஓவோலாபி அபியோடன் ஒமோரிலேவா (31) மற்றும் ஒசாஸ் ப்ரீடோ (39). இவர்கள் அனைவரும்  நைஜீரியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் புதுடெல்லி திலீப் விஹார், நிலோதி பகுதியில், வசித்து வந்தனர். மேலும் கனோன் எவர்ட் மற்றும் கான்டே மேரி ஆகிய இரண்டு  நபர்கள் தலைமறைவாக  உள்ளனர். சுற்றுலா விசாவில்  இந்தியா வந்தவர்கள் டெல்லியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் மணப்பெண், மணமகன் தேடுபவர்களே இவர்கள் குறி.   போலி…

Read More

தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் குறைந்து கொண்டு வந்த பாதிப்பு 6  நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்துள்ளது. அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,562இல் இருந்து 1,568 ஆக அதிகரித்துள்ளது. 1,60,742 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,568 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக கோவையில் 239 பேருக்கும், சென்னையில் 162 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,657 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,68,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில்…

Read More

தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று  புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 523 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.   அதில் 1,562  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 26  லட்சத்து 33 ஆயிரத்து 164  பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இன்று கொரோனாவுக்கு  20 பேர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 961  பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.  கொரோனா பாதிப்பில் இருந்து  1,684  பேர் இன்று  ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து…

Read More

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை – தளர்வுகள் அறிவிப்பு

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை – தளர்வுகள் அறிவிப்பு

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து மின்சார ரெயிலில்அத்தியாவசிய பணியாளர்கள், பெண்கள், 12 வயது உட்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆண் பயணிகள் மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7.30 மணி வரையும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெற்கு ரயில்வே கட்டுப்பாடு விதித்து இருந்தநிலையில், ஆண் பயணிகளும் அனைத்து நேரமும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Read More

முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. நலக்குறைவால் கடந்த 22ம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முதல்-அமைச்சர் .மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் விஜயலட்சுமி  உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்த சசிகலா விஜயலட்சுமி  உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார்.  ஓ. பன்னீர்செல்வத்தை நேரில்…

Read More

தமிழகத்தில் மேலும் 1,509-பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 1,509-பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும், 1,509-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தொற்று பாதிப்பு 1,512- ஆக பதிவாகி இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில்  இன்று 177- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,719- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 54 ஆயிரத்து 718- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,620- ஆக உள்ளது.

Read More
1 2 3 4 5 385