பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது !!

பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா தருவதை யுஏஇ நிறுத்தியது !!

கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாட்டு மக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) தெரிவித்துள்ளது. பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் பொதுமுடக்கம், வெளிநாட்டு பயணிகள் கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை சில நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை மீண்டும் கடுமையாக்கி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரசின் 2வது அலை காரணமாக பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 11…

Read More

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் மோதல் !!

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த  நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் மோதல் !!

செங்கல்பட்டு அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டார். பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் கடலூர் புறப்பட்டுள்ளார். செங்கல்பட்டு அருகே மதுராந்தகம் அருகே கார் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக குஷ்பு கூறுகையில், வேல் யாத்திரையில் பங்கேற்க சென்ற போது விபத்து ஏற்பட்டது. கடவுள் அருளால் உயிர்தப்பினேன். இவ்வாறு அவர்…

Read More

பிடனின் லிபெரல் அமெரிக்க அரசாங்கத்தில் அமெரிக்க-இந்தியர்கள் !!

பிடனின் லிபெரல் அமெரிக்க அரசாங்கத்தில் அமெரிக்க-இந்தியர்கள் !!

அமெரிக்க அதிபராய் தேர்வாகியுள்ள ஜோ பைடன் அமைச்சரவையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி மற்றும் அருண் மஜூம்தாருக்கு இடமளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பைடன் அமைத்துள்ள ஆலோசனை குழுவில் முக்கிய பொறுப்பில் உள்ள விவேக் மூர்த்தி, சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அமைச்சராகவும், ஸ்டான்போர்டு பல்கலை பேராசிரியரான, இந்திய வம்சாவளியை சேர்ந்த அருண் மஜூம்தார் எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. பைடனின் நெருங்கிய நட்பில் உள்ள டாக்டர் விவேக் மூர்த்தி, அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் முக்கிய ஆலோசகளை வழங்கியுள்ளார். ஒபாமா ஆட்சி காலத்தில், அமெரிக்காவின் 19வது சர்ஜன் ஜெனரல்…

Read More

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுடனான தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் முன்னதாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி 306 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்று மாபெரும் தனிப்பெரும்பான்மை பெற்றது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். பதவியேற்றவுடன் தாங்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து அவர்கள் இப்போதே ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். ஜனநாயகக் கட்சி எப்போதும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இவர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவின்…

Read More

கொரோனா நெருக்கடியில் அனைவருக்கும் உதவி செய்த ஹிந்துக்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டு

கொரோனா நெருக்கடியில் அனைவருக்கும் உதவி செய்த ஹிந்துக்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிரிட்டன் தலைநகர் லண்டனில், பிரார்த்தனை நிகழ்ச்சியை, இந்திய தொழிலதிபர் ஹிந்துஜா சமீபத்தில் நடத்தினார்.பிரிட்டன் இளவரசர் சார்லஸ், ‘ஆன்லைன்’ வாயிலாக விளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசியது: இங்கு வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், கொரோனா நெருக்கடியில் சிக்கிய பலரையும் காப்பாற்றும் வகையிலான உதவிகளை, இரக்கம், சமூக உணர்வு மற்றும் உதவும் மனப்பான்மையுடன் மேற்கொண்டனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன். தீபாவளி, இருளை வெல்லும் பண்டிகை. இது தீமைக்கு எதிரானது என்பதால், வைரஸ் பாதிப்பை, நாம் ஒன்றாக கடந்து செல்வோம். இவ்வாறு, அவர் பேசினார்.

Read More

டில்லியில் மீண்டும் லாக் டௌனா ? இப்போதைக்கு இல்லையென்கிறார் தில்லி சுகாதார மந்திரி !!

டில்லியில் மீண்டும் லாக் டௌனா ?  இப்போதைக்கு இல்லையென்கிறார் தில்லி சுகாதார மந்திரி !!

டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டில்லியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 3,235 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 4.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,614 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் டில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ‛டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது. இங்கு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவை இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை,’ என்றார்.

Read More

அமெரிக்காவை பொய்யான வோட்டுக்களால் சீரழிக்க விடமாட்டோம்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவை பொய்யான வோட்டுக்களால் சீரழிக்க விடமாட்டோம்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் ஜோ பைடன் 306 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அதிபர் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் ஆட்சி மாற்ற குழு டொனால்ட் டிரம்ப் அதிபர் மாளிகையை விட்டு வெளியேற வலியுறுத்தி வரும் போதும் இதனால் டிரம்ப் இன்னமும் குடியரசு கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார் இது முன்னதாக சமூகவலைதளங்களில் வேடிக்கைக் உள்ளானது குறிப்பிடத்தக்கது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றுள்ளனர்….

Read More

எல்லையில் இந்தியா பயங்கர பதிலடி- தீவிரவாத கூடாரங்கள் தகர்ப்பு !!

எல்லையில் இந்தியா பயங்கர பதிலடி- தீவிரவாத கூடாரங்கள் தகர்ப்பு !!

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் திருப்பி கடுமையாக தாக்கியதில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில், குரேஸ் செக்டார் முதல் உரி செக்டார் வரை, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. பொது மக்களின் வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. உரியில் உள்ள நம்ப்லா செக்டரில், பாகிஸ்தானின் அத்துமீறலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.ஹஜி பீர்செக்டாரில், பிஎஸ்எப் சப் இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். வீரமரணம்…

Read More

நவாஸ் ஷரீப் மகள் குளியலறையில் திருடு கேமரா வைத்து படம் பிடித்த இம்ரான்கான் பாகிஸ்தான் !!

நவாஸ் ஷரீப் மகள் குளியலறையில் திருடு கேமரா வைத்து படம் பிடித்த இம்ரான்கான் பாகிஸ்தான் !!

‘நான் அடைக்கப்பட்டு இருந்த சிறையின் குளியல் அறைக்குள், ‘கேமரா’ பொருத்தப்பட்டு, மிகவும் தரைக்குறைவான செயலில் சிறைத் துறையினர் ஈடுபட்டனர்,” என, பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம், பரபரப்பு புகார் அளித்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், கடந்த ஆண்டு ஆகஸ்டில், சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு, நவ.,ல், ஜாமினில் அவர் வெளியே வந்தார். அந்த மூன்று மாத காலத்தில், சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் குறித்து, சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார். மரியம் நவாஸ், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:சிறைக்கு…

Read More

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார் – முத்தையா முரளிதரன்

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார் – முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தை முத்தையா முரளிதரன் அளித்துள்ளார். இது தொடர்பாக துபையில் இருந்து மூன்று பக்க அறிக்கை, முத்தையா முரளிதன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. “என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதனாக நான் படைத்த சாதனைகள், என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிடத்திய…

Read More
1 2 3 4 351