விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; ரூ.23.82 லட்சம், 4.87 கிலோ தங்கம் பறிமுதல்

அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி…

Read More

பல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் – அரசு தரப்பு

பல வருடங்களாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உடையவர் ஆர்யன் கான் – அரசு தரப்பு

மும்பை-கோவா சொகுசு கப்பல் ஒன்றில் கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு போதை விருந்து நடந்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து கப்பலில் இருந்த பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். தற்போது அவர் ஆர்தர் ரோடு சிறைச்சாறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஆர்யன்கான் ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு…

Read More

சென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி

சென்னை போலீஸ் கமிஷனருக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி

சென்னை போலீஸ் கமிஷனராக இருந்து வருபவர் சங்கர் ஜிவால்.  இவர் பணியில் இருந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read More

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மன்மோகன்சிங்க்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Read More

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை 14 மற்றும் 15ம் தேதி அரசு விடுமுறை வழங்கப்படும் நிலையில் சனிக்கிழமை சேர்த்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு கோரிக்கையை ஏற்று 16-ஆம் தேதி அதாவது சனிக்கிழமை விடுமுறை வழங்கியுள்ளது. இந்நிலையில் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி சேர்த்து  சனிக்கிழமை விடுமுறை அறிவித்து உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Read More

ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மணி நிலவரம்: தி.மு.க. தொடர்ந்து முன்னிலை

ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மணி நிலவரம்: தி.மு.க. தொடர்ந்து முன்னிலை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணித்து வருகின்றனர்.மற்ற மாவட்டங்களில் காலியாக இருந்த ஊராட்சி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதுதவிர, 2874 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 119…

Read More

கோவில் இடவாடகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி; அமைச்சர் அறிவிப்பு

கோவில் இடவாடகையை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி; அமைச்சர் அறிவிப்பு

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தில், தமிழகத்தில் கோவில் இடத்திற்கான வாடகையை ஆன்லைனில் செலுத்தும் வசதியை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்துள்ளார். இதன்பின், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கோவில் இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணைய வழியில் வாடகை செலுத்தலாம்.  இணையவழி வாடகை மூலம், எவ்வளவு வாடகை பெறப்படுகிறது என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம். நேரடியாக வாடகை செலுத்துவோரின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தது குறித்து பேசிய அவர், மற்ற நாட்களில் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தால் அதனை…

Read More

வட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

வட,தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் (அக்.8,9) வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய…

Read More

ஆயுதபூஜை பண்டிகை: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்; அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆயுதபூஜை பண்டிகை: கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்; அமைச்சர் ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.  சென்னையில் இருந்து ஊருக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கும். இதனால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்க்க அரசு போக்குவரத்து துறை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இந்த பேருந்துகள், வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.  இதன்படி, தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும்…

Read More

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால், அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரும், ஆப்கன் மக்களும் வெளியேற முயற்சித்தனர். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தலீபான்கள் அனுமதி அளித்தனர். இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படை வீரரான பென் சால்டர் ஆப்கானிஸ்தானில் வசித்து வந்தார். அவர் காபூலில் ஓட்டல் மற்றும் தங்கும் விடுதி உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வந்தார். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது தனது தொழில்நிறுவனத்தில் பணியாற்றிவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பி செல்ல பென் சால்டர் உதவி செய்துள்ளார். ஆனால், ஆப்கானிஸ்தான் எல்லையில் அவர்கள் அனைவரையும் தலீபான்கள் தடுத்து நிறுத்தினர்….

Read More
1 2 3 387