தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் குறைந்து கொண்டு வந்த பாதிப்பு 6  நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்துள்ளது. அந்தவகையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,562இல் இருந்து 1,568 ஆக அதிகரித்துள்ளது. 1,60,742 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,568 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக கோவையில் 239 பேருக்கும், சென்னையில் 162 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 1,657 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,68,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,370 ஆக உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்குட்பட்ட 3 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணை நோய்கள் ஏதும் இல்லாத ஒருவர் உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனைகளில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர்.  கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 34,980 ஆக உயர்ந்துள்ளது.