88 கோடியை கடந்தது தடுப்பூசி ‘டோஸ்’

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை நேற்று இரவு நிலவரப்படி, 88 கோடி ‘டோஸ்’ கடந்தது’ என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

நேற்று இரவு 7:00 மணி வரை, நாடு முழுதும் 59 லட்சத்து 48 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நள்ளிரவுக்கு பிறகு மேலும் உயரும்.நாடு முழுதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ், 88 கோடியை கடந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.