- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

7 கோல்டன் குளோப் விருதுகளை வென்ற ‘லாலா லேன்ட்’ ‘பாப்டா’ விருதுக்கும் பரிந்துரை
கோல்டன் குளோப் விருதுகள் வரலாற்றில் முதல்முறையாக 7 விருதுகளை அள்ளிச்சென்ற ‘லா லா லேன்ட்’ திரைப்படம் பிரிட்டன் நாட்டின் மிக உயரிய ‘பாப்டா’ விருதுக்கும் 11 பிரிவுகளின்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
உலகளவில் பிரபலமான கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாநிலத்தில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நேற்று நடைபெற்றது.
74-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆண்டின் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட `லா லா லேன்ட்’ படம் 7 விருதுகளை வென்றது.
இந்தப் படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகராக ரியான் கோஸ்லிங்கும், சிறந்த நடிகையாக எம்மா ஸ்டோன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறப்பான இசையுடன் கூடிய பாடல்கள் மற்றும் காமெடி கலந்த காதல் படமான `லா லா லாண்ட்’ சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர் ஆகிய பிரிவுகளின்கீழ் மொத்தம் ஏழு விருதுகளை அள்ளிச் சென்றது.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் சிறந்த திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் அளிக்கப்படும் அந்நாட்டின் மிக உயரிய விருதான பாப்டா விருதுக்கான 11 பிரிவுகளுக்கும் `லா லா லேன்ட்’ திரைப்படம் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.