5 ஜிக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாக்கு ரூ. 20 லட்சம் அபராதம்

இந்திய கோர்ட் அதிரடி !! பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாக்கு ரூ. 20 லட்சம் அபராதம் !!

‘5 ஜி தொழில்நுட்பத்திற்கு தடை கோரி பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், விளம்பரம் தேடும் நோக்கில் வழக்கு தொடர்ந்த அவருக்கு ரூ. 20 லட்சம் அபராதமும் விதித்தது.

5ஜி தொழில்நுட்பத்தை சோதனை முறையில் பரிசோதித்து பார்க்க, ‘ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, தகவல் தொடர்புத்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா 53, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு , 5ஜி தொழில்நுட்பத்தில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சால், மனிதர்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணுக்கள், செல்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

மின்காந்த கதிர்வீச்சால் புற்றுநோய், இதய கோளாறு, நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, 5ஜி பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி ஜே.ஆர்.மிதா கூறியது, வழக்கு தொடர்ந்த ஜூஹி சாவ்லா, நீதிமன்ற வழக்கு விசாரணை குறித்து சமூக ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார்.இதன் மூலம் அவர் விளம்பரம் தேடும் நோக்கில், சட்ட நடவடிக்கைகளை மீறியுள்ளார். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதுடன், ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.