5ஜி டவரை எரித்த இங்கிலாந்து மக்கள் – கொரோனா வைரஸ்

இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இளவரசர் சார்லஸ் நோயின் பிடியில் சிக்கி குணமடைந்துள்ளார். நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சஸ் நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நோய் இங்கிலாந்து மக்களை பெரிதும் பாதித்துள்ளது.

செல் போன் வளர்ச்சியின் தற்போதைய கட்டமான 5 ஜி தொழில்நுப்டத்தை பல்வேறு நிறுவவனங்கள் இங்கிலாந்தில் வழங்கி வருகின்றன. இந்நிலையில் கொகேரானா வைரசை 5 ஜி-யை இணைத்து ஒரு செய்திபரவியது. அதாவது 5 ஜி செல்போன் டவரில் இருந்து வரும் கதிர்வீச்சு நுரையீரலில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சி விடுவதாக செய்தி பரவியது.

ஏற்கனவே கொரோனா அச்சத்தில் இருந்த இங்கிலாந்து மக்கள் 5 ஜி செல்போன் டவரை பார்த்த இடங்களில் எல்லாம் தீ வைப்பு சம்பவத்தை நடத்தினர். இதனால் செல்போன் நிறுவனங்கள் பலத்த நட்டத்ததை சந்தித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள செல்போன் நிறுவனங்கள் குற்றவாளிகளை கைது செய்வதற்கு உள்ளூர் போலீசாருடன் இணைந்து செயல்படுவோம் என கூறி உள்ளது.

வோடபோன் நிறுவனத்தின் அதிகாரி நிக் ஜெஃபெரி, கூறுகையில்,கொரோனா வைரஸை 5 ஜி உடன் இணைக்கும் ஆன்லைன் கதைகளை “முற்றிலும் ஆதாரமற்றது” “இது இப்போது தேசிய பாதுகாப்பு விஷயமாகும்,” என்று அவர் கூறினார்.