36,000 கோயில்களில் கடைகளை அகற்ற உத்தரவு

தமிழகம் முழுவதிலும் உள்ள 36,000 கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்ற மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவில், கோயில் வளாகங்களில் வணிக நோக்கத்துடன் செயல்படும் கடைகளை அகற்ற வேண்டும். இதனை இந்து சமய அறநிலையத்துறை கண்காணிக்க வேண்டும். 8 வாரங்களுக்குள் கோயில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி அடிவாரத்தில் உள்ள கடைகளை அகற்றக்கோரி 7 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.